பேச்சு:வன் தட்டு நிலை நினைவகம்
குறிப்பு
தொகுஆங்கில விக்கியில் உள்ள கட்டுரை சரிவர எழுதவில்லை என்பது என் கணிப்பு. எனவே தமிழ் விக்கிக் கட்டுரையை வேறுவிதமாக இன்னும் தெளிவாக, கருத்துச் செறிவாக எழுத இருக்கின்றேன். இது ஒரு தற்காலிக தொடக்கம் தான்.--செல்வா 03:28, 16 டிசம்பர் 2008 (UTC)
நிலைவட்டு என்றே குறிக்கலாமா? --Natkeeran 16:59, 28 ஆகத்து 2011 (UTC)
தலைப்பு
தொகுதமிழில் புணர்த்தி எழுதும்போது வன்றட்டு என்றுதான் எழுதப்பட முடியும்.--பாஹிம் (பேச்சு) 02:13, 16 திசம்பர் 2013 (UTC) வன்றட்டு என்றால் அர்த்தம் விளங்கவில்லை. இவ்வாறு புணர்த்தி எழுதுவது கவிதைகளுக்கு சரியாக இருக்கும், கட்டுரைகளில் அவ்வாறு எழுத முடியாது. இவ்வாறான அரிதான மொழிபெயர்ப்புச் சொற்களுக்கு பொருள் பிரித்து எழுதுவதே சிறந்தது. நீங்கள் "தமிழில் புணர்த்தி" என்று தானே எழுதுகிறீர்கள்? "தமிழிற் புணர்த்தி" என்று தானே நீங்கள் எழுதியிருக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 09:49, 23 பெப்ரவரி 2014 (UTC)
நான் இரண்டு சொற்களாக வேறு பிரித்து "புணர்த்தாமல்" எழுதியிருக்கிறேன். ஒற்றைச் சொல்லில் வரும் போது கட்டாயம் புணர்த்தி எழுதப்பட்டாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:46, 24 பெப்ரவரி 2014 (UTC)
- அப்படியாயின், வன் தட்டு என்று சிறு இடைவெளி விட்டுக் குறிப்பிடலாமா?--≈ த♥உழவன் ( கூறுக ) 03:28, 15 சூன் 2014 (UTC)
ஆம். இடைவெளிவிட்டுப் பிரித்தெழுதலாம். ஆயினும் வன்றட்டு என்று புணர்த்தியெழுதுவதே சிறப்பு.--பாஹிம் (பேச்சு) 02:57, 3 செப்டம்பர் 2015 (UTC)
தமிழில்
தொகுHard Disk Drive என ஆஙகிலத்தில் சொல்லப்படும் கணினி கருவிக்கு செந்தமிழில் வன்தட்டு இயக்கி என்று தமிழறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவே இத்தலைப்பே விக்கிக்கு உகந்ததாக இருக்கும். அன்புமுனுசாமி (பேச்சு) 9:15, 16 நவம்பர் 2015 (UTC)
வன்தட்டு என்று எழுதுவது இலக்கணப் பிழை. இதனை எந்தத் தமிழறிஞர் பரிந்துரைத்தாரோ தெரியாது. வன்றட்டு என்றெழுதுவதே சரி.--பாஹிம் (பேச்சு) 03:44, 16 நவம்பர் 2015 (UTC)