பேச்சு:வானூர்தி தாங்கிக் கப்பல்

வானூர்தி தாங்கிக் கப்பல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தாங்கள் எழுதியுள்ளதை கீழ்க்காணுமாறு மற்றி அமைக்கலாமா? வானூர்தி என்னும் சொல்லை ஆள இயலுமா? வானூர்தி என்னும் சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இதில் பல நன்மைகள் இருக்கின்றன. Space craft என்பதற்கு விண்ணூர்தி என்றும் சொல்லலாம். நல்ல சொற்களை, விரிவுற்று கிளைக வல்ல சொற்களை ஆள வேண்டும் என விழைகிறேன்.

வானூர்தி தாங்கிக் கப்பல் என்பது, வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப வந்து இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன.--C.R.Selvakumar 19:00, 15 ஜூன் 2006 (UTC)செல்வா


விமானம் தாங்கிக் கப்பல் என்பதில் என்ன பிரச்சினை? அதிகம் பயன்பாட்டில் உள்ளதுதானே?

வானூர்தி என்னும் சொல்லை ஆண்டால், வானம் என்னும் சொல்லுக்கும், ஊர், ஊர்தி ஆகிய சொற்களுக்கும் வலு சேர்க்கும். ஒரு நிலத்திலே பிளாஸ்டிக்கைப் போட்டால் அது மண்ணோடு கலக்காமல் தனித்தே இருக்கும், இலை, தழை, விதை இட்டால் நன்றாக உரமாகவோ, பிறவாகவோ ஆக்கம் தந்து வளரும். Ecology என்பது போல மொழிகளுக்குள்ளேயும் நுண் தொடர்புகள் உறவுகள் உண்டு. வானூர்தி என்றால் பின்னர் விண்ணூர்தி, நீரூர்தி, தொடர் ஊர்தி சறுக்கூர்தி என்று பற்பல சொற்கள் சமைக்கத் துணை செய்யும். நல்லது என்று நினைத்ததால் சொன்னேன். விருப்பம் இல்லை என்றால் விமானம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.--C.R.Selvakumar 19:39, 15 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, வானூர்தி என்ற சொல் நல்ல தமிழ்ச் சொல்தான். புழக்கத்திலும் இருந்து வருகிறது. விமானத்துக்குப் பதில் வானூர்தி என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. நல்லதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமை குறித்த உங்கள் கருத்துக்கள் குறித்துக் கொள்கையளவில் எனக்கும் உடன்பாடு உண்டு. நிற்க, முதலில் பெயர் குறிப்பிடாமல் கருத்துச் சொன்ன பயனருக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து கருத்துச் சொல்லும்போது உங்கள் பெயரையும் குறிப்பிடுங்கள். உங்களுக்குச் சரியென்று பட்டதைச் சொல்வது நேர்மையானது அதைத் தவறென்று எவரும் சொல்லமாட்டார்கள். Mayooranathan 09:56, 16 ஜூன் 2006 (UTC)

வானூர்தி, விமானம் இரண்டு சொற்களையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதிலும் திருத்தி எழுதுவதிலும் எனக்கு உடன்பாடு தான்.--ரவி 11:20, 16 ஜூன் 2006 (UTC)

வானூர்தி என்பது பொருத்தமாக இருக்கும். இதுவே சரியானது விக்கிபீடியாவிற்கும் பொருத்தமானதாகும்.--Shameermbm 05:53, 14 அக்டோபர் 2009 (UTC)Reply

வானூர்தி என்பது பொதுவாக aircraft என்பதைக் குறிக்கும். எனவே வானூர்தி என்பது இக்கட்டுரைக்கு (aircraft carrier என்பதற்குப்) பொருத்தமானது. ஆனால் airplane, aeroplane அல்லது plane (அ+து: en:Fixed-wing aircraft என்பதற்குத் தமிழ் வேண்டும். அதனை விமானம் எனலாமா?--Kanags \பேச்சு 09:53, 14 அக்டோபர் 2009 (UTC)Reply
Return to "வானூர்தி தாங்கிக் கப்பல்" page.