பேச்சு:வாழ்க்கைப் படி

ஜீவனாம்சம் என்பது வடமொழிச் சொல். இலங்கையில் வாழ்வாதாரம் என்ற சொல் நடைமுறையிலுள்ளது.--பாஹிம் (பேச்சு) 12:34, 16 செப்டம்பர் 2015 (UTC)

வாழ்வாதாரம் என்பது en:Livelihood என்பதைக் குறிக்காதா? --AntanO 12:37, 16 செப்டம்பர் 2015 (UTC)

ஜீவனாம்சத்திற்கு வாழ்க்கைப்படி என்பது சரியான சொல்லாக படவில்லை. வாழாமல் பிரிந்ததால் பெறப்படும் படி எப்படி வாழ்க்கைப்படியாகும் ;-) திருமண முறிவுப் படி அல்லது திருமண முறிவு இழப்பீடு என்றிருக்கவேண்டும்? --Mdmahir (பேச்சு) 12:46, 16 செப்டம்பர் 2015 (UTC)

இங்கே குறிப்பிடப்படும் கருத்தைப் பார்த்தால் இது தாபரிப்பு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:47, 16 செப்டம்பர் 2015 (UTC)

இலங்கை அரச ஆவணங்களில் Livelihood = வாழ்வாதாரம், Alimony = சீவனாம்சம் எனப் பயன்படுத்தப்படுகின்றது. பிழைப்புத்தொகை என்றும் பயன்படுத்தலாம். வாழாமல் பிரிந்ததால் என்றெடுக்காமல், பிரிந்து வாழ்வதால் என எடுத்து வாழ்க்கைப் படி (வாழ்வதற்காக வழங்கப்படும் மானியம்) என்றவாறு கூறலாம். தாபரிப்பும் சீவனாமிசமும் (Alimony) ஒன்றா? இரண்டும் ஒன்றெனில், தாபரிப்பையே பயன்படுத்தலாம். தாபரிப்பு பொதுவழக்கிலுள்ள தமிழ்ச் சொல். --மதனாகரன் (பேச்சு) 12:54, 16 செப்டம்பர் 2015 (UTC)
தாபரிப்பு maintenance case (தாபரிப்புச் செலவு) என்பது வழக்கிலுள்ளது. --AntanO 16:58, 16 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாழ்க்கைப்_படி&oldid=1918256" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாழ்க்கைப் படி" page.