பேச்சு:வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு
தலைப்பு
தொகுLife cycle analysis என்பதை வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு என்று கூறுவது சரியாக இருக்குமா? அதாவது பயன் பொருள் ஒன்றினால் ஏற்படும் முழு விளைவுகளையும் அலசுவதைப் பற்றியது இத்துறை. இத் துறையின் முக்கியத்துவத்தை இப்பொழுது நன்கு உணர்ந்து வருகின்றார்கள். இங்கு வாழ்க்கை என்னும் சொல்லோ வட்டப் பகுப்பாய்வு என்னும் சொல்லோ நன்றாகப் பொருந்துவதாக தெரியவில்லை. பொருளின் அல்லது பயன் பொருளின் முழுக்கால பகுப்பாய்வு எனலாம், அல்லது முழுக்கால விளைவாய்வு எனலாம் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான தொடரால் குறிப்பிடலாம். இப்பொழுதுள்ள தலைப்பை மாற்ற வழியுள்ளதா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். --செல்வா 19:34, 13 மார்ச் 2009 (UTC)
- முழுக்காலம் என்பது இதன் கருத்துருவைச் சரியாக விளக்குவதாகத் தெரியவில்லை. இங்கே "காலம்" என்பதிலும், கட்டங்கள் தான் முதன்மை பெறுகின்றன. இவ்வாறான கட்டங்களின் சுழல்முறை நிகழ்வுகளை "வட்டம்" என்று குறிப்பது மரபு அல்லவா? "உணவு வட்டம்", "வாழ்க்கை வட்டம்" போன்ற தொடர்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இங்கேயும் நிலத்திலிருந்து மூலப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன, பின்னர் அவை பதப்படுத்தப்படுகின்றன, அவற்றைப் பயன்படுத்திப் பொருள்கள் செய்யப்படுகின்றன. அவை தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை பழுதுபடும்போது அகற்றப்படுகின்றன, பின்னர் கழிவாக அகற்றப்பட்டு மண்ணுக்கே மீண்டும் செல்கின்றன. இது ஒரு வாழ்க்கை வட்டம் தான். "முழுக்காலம்" என்பது அளவுமீறிய எளிமையாகமாகத் தெரிகிறது. நல்ல பொருத்தமான வேறு தலைப்புகள் கிடைக்கும்வரை இதுகுறித்துத் தொடர்ந்து கலந்துரையாடலாம். மயூரநாதன் 20:38, 13 மார்ச் 2009 (UTC)
- வாழ்க்கை என்பது உயிர்ப்பொருள் அல்லாததற்குப் பொருந்துமாறு இல்லை. cycle என்பதற்கு சுழற்சி என்பது பொதுவான சொல், ஆனால் இங்கு பொருந்தாது. முழுக்காலம் என்பது "பயன்படும்" முழுக்காலம். பயன்படும் என்பது மண்ணோடு மண்ணாக இயற்கையுடன் முழுவதுமாக இரண்டற கலக்கும் வரையில் ஒரு பொருளின் இருப்பு (சூழலுடன் கொள்ளும் உறவாட்டம்) என்னும் பொருளில் பயன்பாடு என்றேன். பயன் முழுக்கால ஆய்வு அல்லது பயன் முழுச்சுற்று ஆய்வு எனலாம். வாழ்நாள், ஆயுள் என்பது போல் உயிரற்ற ஒன்றுக்கு பயன் காலம் என்பதை பயன் முழுக்காலம் எனலாம். பொருளின் (சூழலுடன் ஆன) உறவாட்ட சுழற்சி என்றுகூடச் சொல்லலாம்.--செல்வா 21:34, 13 மார்ச் 2009 (UTC) உறவாட்ட முழுச்சுற்று ஆய்வு என்றும் சொல்லலாம். அல்லது இன்னும் சுருக்கமாக முழுச்சுற்று ஆய்வு என்றேகூடச் சொல்லலாம். --செல்வா 21:41, 13 மார்ச் 2009 (UTC)
- அரைவாழ்வுக் காலம் போன்ற பயன்பாடுகளில் வாழ்வு என்பதை உயிரற்ற பொருட்களுக்கும் வழங்கி வருகிறோம். இது ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட தொடராகத்தான் பயன்படுகிறது என்பது எனது கருத்து. நிற்க, பயன்படும் காலம் என்பது சரியான பொருளைத் தராது. பொதுப் பயன்பாட்டில் பயன்படுதல் என்னும்போது அது கழிவாக அகற்றப்பட்ட பின்னர் உள்ள காலத்தையோ அது இறுதிப் பொருளாக உருவாகுமுன்னர் உள்ள காலத்தையோ குறிக்காது. ஆனால், Life Cycle Analysis இல் இக் காலங்களும் உள்ளடக்கப்படுகின்றன. செல்வா, நீங்கள் பயன்பாடு என்னும் போது இக் காலங்களையும் உள்ளடக்கித் தான் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் பொதுவாக வாசிப்பவர்களுக்கு இப் பொருள் விளங்காது என்பது எனது கருத்து.மயூரநாதன் 04:56, 14 மார்ச் 2009 (UTC)