பேச்சு:விஜய் குமார்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A. in topic Untitled
Untitled
தொகுஎந்திரனியல் என்பது Roboticist ஆகும். robo துறை குறிக்கும் சொல். அதுவே எந்திரவியல் என்பது engineering பற்றி குறிக்கும் சொல். வேறுபாடு உள்ளதாக கருதுகிறேன். தெரிந்தவர்கள் விளக்கவும். -- --ரவி ஷங்கர் . செல்வா (பேச்சு) 13:10, 21 சூலை 2015 (UTC)
- தானியங்கியல் என்ற பெயரில் கட்டுரை உள்ளது. தானியங்கியல் பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 16:55, 21 சூலை 2015 (UTC)
- பயனர்:AntanO என்ன காரணத்தினால் அந்த வார்ப்புரு அவசியமாகிறது? படித்ததில் ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகவே தமிழ்க் கட்டுரை உள்ளது. விளக்கவும். நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:16, 29 சூலை 2015 (UTC)
- வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆ.வி.யில் இருக்கிறது என்பதால் சரியென்றாகிவிடாது. தற்போது ஆ.வி. கட்ரைக்கும் குறித்த வார்ப்புரு இட்டுள்ளேன். --AntanO 06:20, 29 சூலை 2015 (UTC)
- மேற்கோள் இணைப்புகளையும் சரிபார்த்துள்ளேன். வேறென்ன தேவை என்பது எனக்குப் புரியவில்லை. அவரது வலைப்பக்கம், டெட் கருத்தரங்கப் பேச்சு, பல்கலைக்கழகப் பக்கம் இவையெல்லாம் மேற்கோள்கள் இல்லையென்றால் வேறு எவை என்பதை விளக்கவும். அந்த வார்ப்புருவை இரு கட்டுரைகளிலுமே நீக்கலாம். --Surya Prakash.S.A. (பேச்சு) 06:23, 29 சூலை 2015 (UTC)
- தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களின்படி மேற்கோள் இணைக்கவும். குறித்த நபருடைய வலைப்பக்கம் நம்பத்தகுந்த சான்றாகாது. பார்க்க: விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இதன் ஆ.வி பக்கம். இவற்றில் மேலதிக தெளிவான விளக்கம் உள்ளன. --AntanO 06:32, 29 சூலை 2015 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி ஆன்டன். --Surya Prakash.S.A. (பேச்சு) 08:48, 29 சூலை 2015 (UTC)
சூர்யா ஒரு சிறு சந்தேகம். விஜய் குமார் என்பது ஒரு பொது பெயர். அப்பெயரில் பல பெயர்கள் இருப்பார்கள். இதே பெயரை கொண்ட வேறு துறை சார்ந்த நபர் பற்றி எழுதும் போது குழப்பம் அடைய கூடாது என்பதற்காக தான் விஜயகுமார் உடன் (எந்திரனியல்) என்று சேர்த்தேன். தற்போது அதை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். குழப்பம் அடைய மாட்டார்களா ? --ரவி ஷங்கர் . செல்வா (பேச்சு) 06:48, 29 சூலை 2015 (UTC)
- நிறைய கட்டுரைகள் அப்பெயரில் உருவாக்கப்படும்போது அவ்வாறு இணைத்துக் கொள்ளலாம். இக்கட்டுரைக்கு விஜய் குமார் (பேராசிரியர்) என்பது பொறுத்தமாக இருக்கும். --Surya Prakash.S.A. (பேச்சு) 08:48, 29 சூலை 2015 (UTC)