பேச்சு:வில்லியம் லாரன்ஸ் பிராக்

வில்லியம் லாரன்ஸ் பிராக் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

DNA - தமிழில்?

தொகு

இக்கட்டுரையிலும் வேறு இடங்களிலும் வருகின்ற DNA என்பது தமிழில் எப்படி வரும்? விக்சனரி "ஞிழிகி" (எ.டு.: dna typing) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறதே. அது எங்கிருந்து வருகிறது??--பவுல்-Paul (பேச்சு) 15:21, 19 மார்ச் 2012 (UTC)

மரபணு என மாற்றியுள்ளேன். இக்கட்டுரையில் வெளி இணைப்புகள் தொகுத்தலின் போது தெரிகின்றன. ஆனால் கட்டுரையில் தெரியவில்லை ஏன்?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:30, 19 மார்ச் 2012 (UTC)

மரபணு வேறு. டி. என். ஏ. வேறு. மாற்றத்தை மீள்விக்க வேண்டுகிறேன். தமிழிலும் டி. என். ஏ. என்றே எழுதலாம். அல்லது, ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனலாம்--இரவி (பேச்சு) 18:57, 19 மார்ச் 2012 (UTC)

இனக்கீற்று அமிலம் என மாற்றலாமா?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:08, 19 மார்ச் 2012 (UTC)

nucleic acid (கரு அமிலம்), ribonucleic acid (ரைபோ கரு அமிலம்), deoxyribo nucleic acid (ஆக்சிசன் அற்ற ரைபோ கரு அமிலம்) என்பவை இத்துறையில் மிக அடிப்படையான சொற்கள் மட்டுமல்ல. அச்சொற்கள் தரும் வேதி அமைப்பு குறித்த தகவலும் முக்கியமானது. பொத்தாம் பொதுவான இனக்கீற்று அமிலம் என்பது துறை சார் விரிவான கட்டுரைகளில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இனக்கீற்று அமிலம் என்னும் சொல்லும் தமிழ் விக்கிப்பீடியாவிலேயே தோன்றி புழக்கத்துக்கு வந்த சொல்லாகத் தெரிகிறது--இரவி (பேச்சு) 19:16, 19 மார்ச் 2012 (UTC)

வெளி இணைப்புகள் இப்போது தெரிகின்றன. சிறு பிழை திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:25, 19 மார்ச் 2012 (UTC)
  • இரவி, விளக்கத்துக்கு நன்றி. மரபணு = gene என்று பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிகிறது. "கரு அமிலம்" நேரடி தமிழாக்கமாக உள்ளது. "ஆக்சிசன்" = பிராணவாயு (உயிர்வளி) என்று பயனில் உள்ளது. ஆனால் "ரைபோ" தமிழில் கூற முடிந்தால், De-oxy-ribo-nucleic-acid எனும் ஐந்து கூறுகளையும் இணைக்கும் வகையில் ஒரு கலைச்சொல்லை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். செல்வா, உங்கள் பரிந்துரை என்னவோ?!--பவுல்-Paul (பேச்சு) 01:49, 20 மார்ச் 2012 (UTC)
Return to "வில்லியம் லாரன்ஸ் பிராக்" page.