பேச்சு:வீற்றிருக்கும் எருது

தலைப்பை வீற்றிருக்கும் எருது (தலைவர்) அல்லது வீற்றிருக்கும் விருது (அமெரிக்க இந்தியர்) என்பதுபோல மாற்றலாமா ? அல்லது அவரது கையொப்பப்படி சிட்டிங் புல் என்றே தலைப்பிடலாமா ? சட்டென்று இது ஒருவரின் பெயர் என்பது தலைப்பிலிருந்து விளங்கவில்லை ?--மணியன் (பேச்சு) 00:46, 12 மார்ச் 2012 (UTC)

வார்ப்புரு உருவாக்க வேண்டுகோள் தொகு

தொழில்நுட்பம் தெரிந்த ஒருவர் Infobox American Indian chief தகவற்பெட்டியைத் தமிழில் உருவாக்கித் தந்தால் இக்கட்டுரையில் பயன்படுத்தலாம். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 00:39, 12 மார்ச் 2012 (UTC)

கூடுதல் தரவிழப்பின்றி அரசியல்வாதி தகவற்பெட்டியை பயன்படுத்தி உள்ளேன். வேண்டுமெனில் Infobox American Indian chief தகவற்பெட்டியைத் தமிழாக்கலாம்....--மணியன் (பேச்சு) 00:52, 12 மார்ச் 2012 (UTC)
  • நன்றி, மணியன். "அரசியல்வாதி" தகவற்பெட்டியே போதும் என்று தோன்றுகிறது. தலைப்பை "வீற்றிருக்கும் எருது (தலைவர்)" என்று மாற்றிவிட்டு, "வீற்றிருக்கும் எருது" என்றும் "சிட்டிங் புல்" என்றும் வழிமாற்றலும் கொடுக்கலாமோ!--பவுல்-Paul (பேச்சு) 01:04, 12 மார்ச் 2012 (UTC)
ஆங்கிலத்தில் முதலில் தலைப்பைப் பார்த்த போதும் sitting bull என்றால் என்ன என்று விளங்கவில்லை. மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் sitting bull அல்லது அதற்கு ஈடான மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி உள்ளார்கள். வீற்றிருக்கும் எருது என்ற பெயரில் வேறு ஏதேனும் பரவலான பொருள் இல்லாத பட்சத்தில் அடைப்புக்குறி விளக்கம் தேவை இல்லை. மற்ற பல கட்டுரைகளிலும் கூட அதன் பொருளைத் தலைப்பிலேயே விளக்குவதில்லை தானே?--இரவி (பேச்சு) 14:31, 12 மார்ச் 2012 (UTC)
  • இரவி, நீங்கள் கூறுவது சரியே. இருப்பினும், அமெரிக்க-இந்தியத் தலைவர்களின் பெயர்கள் பலகாறும் "குறிப்புப் பெயர்கள்" ஆகும். அவை ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தவும், வரலாற்று மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளைக் குறிக்கவும் அளிக்கப்பட்டதுண்டு. காண்க: இங்கே எனவே, பெயரை அப்படியே தமிழ் எழுத்துகளில் கொடுத்து மொழிபெயர்ப்பை வழிமாற்றலாகக் கொடுக்கலாம் போலத் தெரிகிறது. --பவுல்-Paul (பேச்சு) 15:21, 12 மார்ச் 2012 (UTC)
Return to "வீற்றிருக்கும் எருது" page.