பேச்சு:வைக்கோல்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic Hay எதிர் straw

ஆஹா..கொஞ்சம் என்னை நானே பாராட்டிக் கொள்ள அனுமதியுங்கள் :) எங்கிருந்தும் எடுத்து மொழி பெயர்க்காமல் என் அனுபவ அறிவில் எழுதிய விரல் விட்டு எண்ணக்கூடிய கட்டுரைகளில் ஒன்று இது. விவசாயியான என் தந்தை இதை கண்டால் மகிழ்வார் என நினைக்கிறேன். பேச்சு:உரல் பக்கத்தில் காணப்படும் மேலும் சில் தலைப்புகளிலும் விரைவில் கட்டுரைகள் எழுத முயல்கிறேன். உரல் கட்டுரை எழுதி என்னை மறைமுகமாக இக்கட்டுரை எழுதத் தூண்டிய அடையாளம் காட்டாத பயனருக்கு நன்றி.--ரவி (பேச்சு) 18:33, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

நல்ல கட்டுரை. விடுப்பு அறிவித்த என்னையும் எழுதத் தூண்டும் தலைப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். :-) -- Sundar \பேச்சு 05:16, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

சோடி மாடுகள் தொகு

இதில் சோடி மாடுகள் என்ற கூற்றில் உள்ள சோடி என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில் இரட்டை மாடுகள் எனப்பயன்படுத்தலாம். --Sivakumar \பேச்சு 11:50, 11 பெப்ரவரி 2007 (UTC)

சுட்டிக்காட்டியதற்கு நன்றி சிவா. ஜோடி, தமிழ்ச் சொல் அல்ல. இரட்டை என்றால் double என்றாகி விடும். இங்கு pair என்னும் பொருளில் இணை என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளேன்.--Ravidreams 11:55, 11 பெப்ரவரி 2007 (UTC)
நன்று ரவி. நல்ல சொல்லாட்சி. --Sivakumar \பேச்சு 12:37, 11 பெப்ரவரி 2007 (UTC)

Hay எதிர் straw தொகு

Hay , straw ஆகிய இரு ஆங்கில இணைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. அடிப்படையில் இரண்டும் நெருக்கமான இரு வேறு பதங்கள் ஆகும். straw - தானியங்களின் உலர்ந்த தாள் பகுதி. Hay - புல் முதலானவற்றின் தாள். தகவல்களைப் பெற்று கட்டுரையை விளக்கமாக விரிவுபடுத்த வேண்டுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 03:27, 6 சூலை 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைக்கோல்&oldid=2844540" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைக்கோல்" page.