பேச்சு:ஹர் கோவிந்த் கொரானா

ஹர் கோவிந்த் கொரானா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இப்பக்கம் அர்கோபிந்த் குரானா பக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.--மணியன் 06:15, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

இரு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். சரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்து வழி மாற்றப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 11:04, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

ஆங்கில விக்கியில் "Har Gobind Khorana, or Hargobind Khorana (Punjabi: ਹਰਿ ਗੋਬਿੰਦ ਖੁਰਾਨਾ , Hindi: हरगोविंद खुराना, born January 9, 1922)" என்று கொடுத்திருப்பதால் அர்கோபிந்து கொரானா என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தியில் அ'ர்கோவிந்த்' குரானா என்றும் இலத்தீனில் அ'ர் கோ'பிந்த்' கொரானா என்றும் பஞ்சாபியில் அ'ரி கோபி'ந்த்' குரானா என்றும் வெவ்வேறாக உள்ளது. நாம் பஞ்சாபியையும், இலத்தீன் வடிவத்தையும் முதன்மையாகக் கொண்டு (சிறிது கலந்து), அர்கோபிந்து குரானா அல்லது அரிகோபிந்து குரானா எனலாம். தமிழில் து என்று சேர்ப்பது புறப்பெயராக (exonym) வழங்கும் பொழுது ஏற்படும் சிறு திரிபு. குரானா என்பது சரியானது என நினைக்கிறேன். அரிகோபிந்து என்பது அர்கோபிந்த் என்று சொல்வதைக் காட்டிலும் சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அர்கோபிந்த் என்றும் சொல்லலாம். பிறர் கருத்துகளையும் அறிந்து தேர்ந்தெடுங்கள். --செல்வா 16:08, 15 அக்டோபர் 2009 (UTC)Reply
வங்காள மொழியில் Rabindranath Tagore உச்சரிப்பு ரவீந்திரநாத் தாகூர். அங்கு ப என்று எழுதினாலும் வ என உச்சரிக்கிறார்கள். பஞ்சாபியிலும் அப்படித்தானோ எனக்குத் தெரியாது? அப்படியென்றால் இந்தியில் உள்ளது போன்று "கோவிந்த்" சரியாக இருக்கலாம்.--Kanags \பேச்சு 21:48, 15 அக்டோபர் 2009 (UTC)Reply
அர்கோவிந்த் குரானா என இந்தியில் இருப்பதுபோலவே வைத்துக்கொள்ளலாம்.--மணியன் 03:52, 16 அக்டோபர் 2009 (UTC)Reply
Return to "ஹர் கோவிந்த் கொரானா" page.