பேச்சு:1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தலைப்பிடும்போது முதலாவது இரண்டாவது என்று தலைப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? அல்லது நடைபெற்ற ஆண்டை அடிப்படையாக்க கொண்டு தலைப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? விக்கியில் ஏற்கனவே உள்ள கட்டுரைப்படி முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என தலைப்பிட்டுள்ளேன். இது பற்றிய கருத்துக்களை அறியலாமா? --P.M.Puniyameen 04:25, 27 திசம்பர் 2010 (UTC)Reply

வழமையான நடைமுறைப்படி **** தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்பதே சிறப்பாக இருக்கும். 10வது போட்டிகள் கட்டுரையின் தலைப்பையும் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 05:46, 27 திசம்பர் 2010 (UTC)Reply

Kanags தாங்கள் குறிப்பிட்டது போல பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தலைப்பிலும் மாற்றத்தை மேற்கொண்டேன். ஆனால் இது குறித்து ரவி, ஜெ.மயூரேசன் ஆகியோரால் ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது என்ன செய்யலாம்?--P.M.Puniyameen 06:39, 27 திசம்பர் 2010 (UTC)Reply

முதலில் மயூரேசன் 10 ம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்றே தலைப்பை வைத்திருந்தார். எனினும் ஒரு குறிப்பு அதன் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். எதிர்காலத்தில் இவ்வாறு பல கட்டுரைகள் உருவாகலாம். எளிமை கருதி இவ்வாறு தலைப்பிடுவது நல்லது.--Kanags \உரையாடுக 06:54, 27 திசம்பர் 2010 (UTC)Reply

சில திருத்தங்கள் தொகு

கீழ்வரும் வரிகளை நீக்கியுள்ளேன்:

  • //இலங்கையின் நிலை

முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 42 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களுள் 7 பேர் தங்கம் வென்றனர்.// இங்கு தரப்பட்டுள்ள தகவல்கள் மேலேயுள்ள பட்டியலில் உள்ளது. திரும்பக் குறிப்பிடத் தேவையில்லை என நினைக்கிறேன்.

  • //தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியாகையால் இலங்கை வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளுக்கு கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலமாக் கிடைத்தமை விசேட அம்சமாகும்.//

மற்றைய நாடுகளை விட இலங்கைக்கு இதனால் ஏன் சிறப்பு?--Kanags \உரையாடுக 09:03, 27 திசம்பர் 2010 (UTC)Reply

Return to "1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்" page.