பேச்சு:2009 உலகளாவிய ஈழத்தமிழர் இனவழிப்பு எதிர்ப்புப் போராட்ட பட்டியல்
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் இனவொழிப்புக்கு எதிரானப் போராட்டங்களும், தமிழீழ விடுதலைக்கு ஆதாரவானப் போராட்டங்களும் இதுவரை விக்கியில் முழுமையாக ஆவணப்படுத்தாமல் விடப்பட்டிருந்தது ஒரு குறையாகவே இருந்தது. இவைகளே ஆவணப்படுத்த வேண்டியவைகள். தற்போது இது தொடர்பில் கவனம் எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குறியது.
- இனவொழிப்புக்கு எதிர்ப்புப் போராட்டங்கள்
- தமிழீழ விடுதலைக்கு ஆதரவுப் போராட்டங்கள்
என இரண்டு தலைப்பில் நாடுகள் வாரியாக ஆவணப்படுத்துதல் இன்னும் பொருத்தமானதாக இருக்கும். அந்ததந்த நாட்டுப் போராட்டங்களின் அனைத்து நிழல்ப்படங்களையும் செய்தியையும் குறிக்க முடியாத இடத்தில் அதன் வெளியினைப்புக்களை இணைத்துவிடுவது நல்லது. --HK Arun 08:22, 8 பெப்ரவரி 2009 (UTC)
வார்ப்புரு
தொகுஇதற்கென்று ஒரு வார்ப்புருவை அமைத்து நாடுகள் வாரியாக ஆவணப்படுத்துதல் நன்று.--HK Arun 08:26, 8 பெப்ரவரி 2009 (UTC)
தகவல்கள், வேறு தலைப்பில் சேக்கப்பட வேண்டும்...
தொகுஇலங்கை அரசு தமது வான்படை, தரைப்படை, கடல்படை என முப்படைகளையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதாக கூறி திட்டமிட்டு தமிழ் இனவழிப்பை தொடர்ந்து வருகின்றது. இதற்கு தம் பக்கம் நியாயங்களை உலகுக்கு கூறுமுகமாக பொய் பரப்புரைகளை சர்வதேச அளவில் நிகழ்த்தியும், இலங்கை உள்ளூர் ஊடக முடக்கம் செய்தும், ஊடகவியலாளர்களை கொலை செய்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதாகக் கூறி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றது. தமிழின அழிப்பு உலகிற்கு தெரியாதவாறு அதனை மூடிமறைத்து வருகின்றது. இப்பகுதிகளுக்கு சென்று நேரடியாக நிலமைகளைப் பார்வையிட கோரும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் அனுமதி மறுத்து வருகின்றது.[1]
இதனால் இலங்கையில் தமிழர் வாழ் பகுதிகளில் நாளாந்தம் தமிழர் படுகொலை செய்யப்படுவதுடன், ஆட்கடத்தல், பாலியல் வன்முறைகள் போன்ற பலக்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவற்றின் உச்சக்கட்ட இனவழிப்பு நடவடிக்கையாக மகிந்த ராசபக்சாவின் அரசியல் தலமையின் கீழ் பல நாடுகளின் தொழில் நுட்ப ராடார் உதவிகள், யுத்தத் தாங்கிகள், நவீன ஆயுதங்கள் உற்பட அனைத்தையும் பயன்படுத்தி தமிழின அழிப்பு போரை கொடூரமாக நிகழ்த்தி வருகின்றது. உலகில் தடைச்செய்யப்பட்ட க்ளஸ்டர் குண்டுகளையும் வான்படை தமிழர் குடியிருப்புக்கள் மீது போட்டு தமிழர்களை அழிக்கின்றது. இதனால் இலங்கையில் தமிழின அழிப்பின் கொடூரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் கொதித்தெழுந்து பல்வேறு வழிகளில் ஈழத்தமிழர் இனவழிப்புக்கு எதிரானப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இந்த தமிழினவழிப்புக்கு எதிரானப் போராட்டங்கள் இன்று தமிழகத் தமிழர், மலேசியத் தமிழர், சிங்கப்பூர் தமிழர் மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர் என அனைவராலும் பல்வேறு வழிவடிவங்களில் தொடர்கின்றது. அது இலங்கைத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு தமிழீழத் தனியரசே என்று தமிழீழ விடுதலை ஆதரவு போராட்டங்களாகவும் உள்ளன. --Natkeeran 23:04, 10 பெப்ரவரி 2009 (UTC)