பேச்சு:2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்

இந்தக் கட்டுரைக்கு மிக உகந்த தலைப்பினை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:12, 4 ஆகத்து 2015 (UTC)Reply

2015 மதுவிலக்கு போராட்டங்கள் என்பதே போதுமானது. --மாகிர் (பேச்சு) 23:32, 4 ஆகத்து 2015 (UTC)Reply

@மாகிர்... தங்களின் பரிந்துரைக்கு நன்றி. (தமிழகம்) என்பதனை தலைப்பிலிருந்து நீக்கிவிட்டேன். ஆதரவு என்பதனை நீக்குவது குறித்து இன்னமும் சிந்தித்து, பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:13, 11 ஆகத்து 2015 (UTC)Reply

"ஆதரவு" என்றால் மதுவிலக்கிற்காக போராடும் ஒரு அமைப்பிற்காக, நபருக்காக தமது ஆதரவை வழங்குவதாக என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் அனைத்துத் தரப்பினரும் தனித்தனியாகவே போராடுவதை காண முடிகிறது. மற்றவர்களின் கருத்துக்களையும் பரிசீலிக்கலாம். -- மாகிர் (பேச்சு) 13:32, 11 ஆகத்து 2015 (UTC)Reply

காவல்துறை

தொகு

"பூட்ஸ் காலால் மாணவிகளை எட்டி உதைத்தும், அவர்களின் கைகள் மற்றும் ஆடைகளை பிடித்து இழுத்தும் அநாகரிகமாக நடத்துகொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது". இந்தத் தகவல் முக்கியமானது. போராட்டங்களில் எந்தக் காவலரும் மென்மையாக நடந்துகொள்வது இல்லை. "மிகக்கடுமையாக" என்பதைவிட மேற்கண்ட தகவலை அப்படியே இணைப்பதே பொருத்தம். பூட்ஸ் காலால் உதைத்ததை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன. இராமதாசு போன்றவர்கள் அதனை சுட்டி கண்டித்திருக்கின்றனர். இத்தகவல் தி இந்து பத்திரிக்கையில் உள்ளதால் அப்படியே (அடைப்புக்குறிக்குள் போடுவது) சரியாக இருக்கும். நன்றி -- மாகிர் (பேச்சு) 15:58, 5 ஆகத்து 2015 (UTC)Reply

Return to "2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்" page.