பேச்சு:26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரை ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள போதிலும், அவற்றுள் ஒன்றுக்கேனும் ஓர் ஆதாரத்தையேனும் இதுவரை சுட்டிக் காட்டவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:12, 26 அக்டோபர் 2012 (UTC)
- இந்தக் கட்டுரையில் அண்மையில்தான் விக்கி நடையில் குறுங்கட்டுரையாக அமைந்திருந்த பழைய கட்டுரையை நீக்கி புதிய உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொகுத்தல்களை நீக்கி முந்தைய பதிப்பிற்கு மீள்விக்கலாமா ?--மணியன் (பேச்சு) 08:39, 26 அக்டோபர் 2012 (UTC)
- மேலதிகமாக சேர்த்த தகவல்கள் ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் படித்தபோது இது சிறந்த முறையிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. மொழிபெயர்க்கும் போது ஆதாரங்களைத் தவற விட்டு விட்டார் போலும். ஆங்கில விக்கியில் இருந்து தேவையான ஆதாரங்களை இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 09:14, 26 அக்டோபர் 2012 (UTC)
Kanags (பேச்சு): நாங்கள் (NSS-IITM-tamil (பேச்சு)) தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதில் குறைந்த அனுபவம் கொண்டவர்களாவோம். ஆகையால் சிறு பிழைகளை மன்னிக்கவும். நாங்கள் இன்னும் சிறப்பாக பங்களிக்க, உங்களது கருத்துகள் மிகவும் வரவேற்க்கப்படுகின்றது.