பேட்டி ஜோ வாட்சன்

பேட்டி ஜோ வாட்சன் (Patty Jo Watson, 26 ஏப்பிரல் 1932 – 1 ஆகத்து 2024)[1] ஓர் அமெரிக்கப் பெண் தொல்லியலாளர். முன்கொலம்பியர் அமெரிக்காவின் இயற்குடிகளின் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். குறிப்பாக, கெண்டுகி வட்டார ம்ம்மத் குகை ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர்.[2] இவர் புனித உலூயிசில் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தகைமைப் பேராசிரியரானார்.[3] இவர் 2004இல் ஓய்வு பெறும்வரை, புனித உலூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை மல்லின்கிரோடிட் தகைமைப் பேராசிரியராக இருந்தார்.[4]

பேட்டி ஜோ வாட்சன்
Patty Jo Watson
பிறப்பு(1932-04-26)ஏப்ரல் 26, 1932
நெப்ராஸ்கா, ஐ.அமெரிக்கா
இறப்புஆகத்து 1, 2024(2024-08-01) (அகவை 92)
ஆர்லிங்டன், மாசச்சூசெட்ஸ்
கல்விப் பின்னணி
கல்விசிக்காகோ பல்கலைக்கழகம்
கல்விப் பணி
துறைதொல்லியல்

கல்வி

தொகு

வாட்சன் 1959இல் தன் முனைவர் பட்டத்தை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3] சிகாகோ ப்ல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இவர் இராபெட் பிர்எயிடுவுட்டிடம் பயின்றார்.[3][4]

வாழ்க்கைப்பணி

தொகு

வாட்சன் தொடக்கத்தில் பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளர்.[2][3] இவரது கணவரான ரிச்சர்டு ஏ. வாட்சன் இவரை அன்மைக் கிழக்கு நாடுகளுக்கு மாற்றாக வட அமெரிக்கத் தொல்லியலில் பணிபுரிய இணக்குவித்துள்ளார்.[4]

வாட்சன் நிகழ்வுசார் தொல்லியல் முறையை மின்வைத்தவர். இந்த அணுகுமுறைக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளார்.[2][5]

மேலும் இவர் தொல்லியலுக்கு இனவரைவியலைப் பயன்படுத்தி விளக்கம் அளிப்பவர்.[6] இவர் 1960களில் ம்ம்மத் குகையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரைகுரை தொல்லியல் தரவுகளை நிரப்ப,தொல்வாழ்க்கைமுறை பொழுதுபோக்குகளை நிகழ்த்திப் பார்க்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். " இவர் தொல்லியற் ப்டிவுகளில் இருந்து தாவர கரிம மாக்க எச்சங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளுக்குப் பெரும்பங்களித்துள்ளார்.. மேலும் முன்கொலம்பிய வட அமெரிக்காவில் முன்கோதுமை வேளாண்மையின் தனித்த தோற்றத்தைக் கண்டறிந்தார்."[6] ம்ம்மத் குகையில் வாழ்ந்த அமெரிக்க இயற்குடிகளின் உணவைப் பற்றிய அவரது ஆய்வு, அங்கு வாழ்ந்தவரின் சிறூடல் ஆய்வையும் உள்ளடக்கியதால், பல்துறைபங்களிப்புடையதாகும்.[4]

தகைமைகள்

தொகு

வாட்சன் 1988 இல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4] டிஸ்கவர் இதழ்அதன் 2002ஆம் ஆண்டு நவம்பர்மாதப் பதிப்பில் 50 அரிய பெண் அறிவியலாளர் பட்டியலில் வாட்சனை சேர்த்து கட்டுரை வெளியிட்டது."[7] அக்கட்டுரை வாட்சனை வட அமெரிக்கத் தொல்வேளான்மைக் கட்டமைப்புக்கான தரவுகட்காகவும் தொல்லியலில் அறிவியல் முறைகளை அறிமுகப் படுத்தியதற்காகவும் பாராட்டியது."[7] வாட்சன் அமெரிக்கத் தொல்லியல் நிறுவனப் பொற்பதக்க விருதை தொல்லியல் பங்களிப்புகட்காக 1999இல் அமெரிக்கத் தொல்லியல் நிறுவனத்தில் இருந்து பெற்றார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary: Patty Jo Watson, professor emerita in anthropology, 92". The Source. 15 August 2024. https://source.washu.edu/2024/08/obituary-patty-jo-watson-professor-emerita-in-anthropology-92/. 
  2. 2.0 2.1 2.2 Lindsey Alston, ed. (2007). "Patty Jo Watson". EMuseum. Minnesota State University, Mankato. Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  3. 3.0 3.1 3.2 3.3 "Patty Jo Watson Faculty Home Page". Washington University in St. Louis. Archived from the original on 2008-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "About Alumni: C. Vitae: Cave Crawler". University of Chicago Magazine 95 (5). June 2003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-9508. http://magazine.uchicago.edu/0306/alumni/vitae.shtml. பார்த்த நாள்: 2009-08-26. 
  5. Herst, K. Kris. "Patty Jo Watson". About.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  6. 6.0 6.1 "Academy Fellows: Patty Jo Watson, Ph.D." Academy of Science-St. Louis. Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  7. 7.0 7.1 Svitil, Kathy A. (November 1, 2002). "The 50 Most Important Women in Science". Discover. பன்னாட்டுத் தர தொடர் எண்:0274-7529. http://discovermagazine.com/2002/nov/feat50. பார்த்த நாள்: 2009-08-26. 
  8. http://www.archaeological.org/webinfo.php?page=10100 பரணிடப்பட்டது 2007-09-25 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-2-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்டி_ஜோ_வாட்சன்&oldid=4084854" இலிருந்து மீள்விக்கப்பட்டது