பேட்மா சாகின்
பேட்மா சாகின் (Fatma Şahin) துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு வேதிப் பொறியியலாலரும் அரசியல்வாதியும் ஆவார். 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று சாகின் எர்டோகனின் மூன்றாவது அமைச்சரவையில் குடும்ப மற்றும் சமூக கொள்கைகள் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பேட்மா சாகின் Fatma Şahin | |
---|---|
வடக்கு ஆபிரிக்காவின் மத்திய கிழக்கு உலக பொருளாதார மன்றம் - 2012 ஆம் ஆண்டு- பேட்மா சாகின் | |
காசியான்டெப் மேயர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மார்ச்சு 2014 | |
முன்னையவர் | அசிம் குசெல்பே |
குடும்பம் மற்றும் சமூக கொள்கைகள் அமைச்சகம் | |
பதவியில் 6 சூலை 2011 – 25 டிசம்பர் 2013 | |
முன்னையவர் | செல்மா அலியா கவாப் |
பின்னவர் | அய்செனூர் இசுலாம் |
வார்ப்புரு:GNAT MP | |
பதவியில் 3 நவம்பர் 2002 – 7 சூன் 2015 | |
தொகுதி | காசியன்டெப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1966 காசியான்டெப், துருக்கி |
தேசியம் | துருக்கி |
அரசியல் கட்சி | நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி |
துணைவர் | இசெட் சாகின் |
பிள்ளைகள் | 2 |
கல்வி | வேதிப் பொறியியல் |
முன்னாள் கல்லூரி | இசுத்தான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி, பொறியாளர் |
இணையத்தளம் | www |
1966 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 அன்று துருக்கி நாட்டின் காசியான்டெப் நகரில் முசுதபா, பெரிகான் சாகின் தம்பதியருக்கு மகளாக சாகின் பிறந்தார். இசுதான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் பாடத்தைப் படித்தார். நெசவுத் துறையில் பொறியாளராகவும் மேலாளராகவும் பேட்மா சாகின் பணியாற்றினார்.[1]
தனது கணவர் இசெட் சாகினுடன் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். இருவரும் இணைந்து நீதி மற்றும் மேம்பாடு என்ற ஒரு கட்சியை உருவாக்கினர். மாகாண அமைப்பில் தீவிரமாக பங்கேற்ற இவர், தனது சொந்த ஊரிலிருந்து மூன்று முறை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காசியான்டெப் நகரிலிருந்தும் தென்கிழக்கு அனடீலியா மண்டலத்திலிருந்தும் துருக்கிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் சாகின் என்ற சிற்ப்புக்கு உரியவரானார். தனது கட்சியின் பெண்கள் கிளையின் தலைவராக சாகின் பணியாற்றினார்.[1][2][3][4]
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து, பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகனின் மூன்றாவது அமைச்சரவையில் ஒரே பெண் மந்திரியாக பதவியேற்றார்.[4] இவருக்கு பதிலாக 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 அன்று அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அயிசெனூர் இசுலாம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்[5].
2014 உள்ளாட்சித் தேர்தல்களின் விளைவாக காசியாண்டெப்பின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் சாகின் வெற்றி பெற்று மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
பேட்மா சாகினுக்கு ஒரு மகன் , ஒரு மகள் என இரண்டு குழந்தைகளுக்குத் தாயாவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Fatma Şahin" (in Turkish). TBMM. Archived from the original on 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Biyografi" (in Turkish). Fatma Şahin Official Website. Archived from the original on 8 August 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kaya, Ahmet (6 July 2011). "'Ya anam bacım ne işin var senin bu kalabalıkta'" (in Turkish). Hürriyet. http://www.hurriyet.com.tr/gundem/18186677.asp. பார்த்த நாள்: 10 July 2011.
- ↑ 4.0 4.1 4.2 "'Fatma Bacı' kabinenin tek kadın bakanı oldu" (in Turkish). Radikal. 6 July 2011. http://www.radikal.com.tr/Radikal.aspx?aType=RadikalDetayV3&ArticleID=1055320&CategoryID=78. பார்த்த நாள்: 10 July 2011.
- ↑ "Kabinedeki yeni bakanları tanıyalım" (in Turkish). Haber7. 25 December 2013. http://www.haber7.com/ic-politika/haber/1109689-basbakan-acikladi-iste-yeni-bakanlar. பார்த்த நாள்: 25 December 2013.
- ↑ "2014 Yerel seçimin ilk kazananları" (in Turkish). Bugun இம் மூலத்தில் இருந்து 31 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140331041758/http://gundem.bugun.com.tr/ilk-kazananlar-belli-oldu-haberi/1039714.
- ↑ "31 March 2019 Gaziantep Local Election Results". Yeni Şafak.