பேட்ரிக் ஓ 'சல்லிவன் (வழக்கறிஞர்)
பிரித்தானிய வழக்கறிஞர்
பேட்ரிக் ஓ 'சல்லிவன் (Patrick O' Sullivan) (20 சனவரி 1835 - 25 பெப்ரவரி 1887) என்பவர் ஐரிசு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக 1877 முதல் 1882 வரையும், மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
பேட்ரிக் ஓ 'சல்லிவன் | |
---|---|
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1877–1882 | |
முன்னையவர் | எச். எஸ். கன்னிங்காம் |
பின்னவர் | ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சனவரி 1835 |
இறப்பு | 25 பெப்ரவரி 1887 (52 வயதில்) |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | அரசு தலைமை வழக்கறிஞர் |
இங்கிலாந்தின் கிரேஸ் இன்னில் சட்டம் பயின்ற இவர், 1864 இல் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். [1]
இவர் இந்தியாவில் சிட்னி ஜேன் மூர் என்பவரை மணந்தார். இவர்களின் ஒரே மகனான, ஆர்தர், பிரித்தானிய இராணுவ அதிகாரியானார். ஆர்தர் 1914 கிறிஸ்துமஸ் சண்டையில் முக்கிய பங்கு வகித்தார். [2]
குறிப்புகள்
தொகு- ↑ Men-at-the-bar: a Biographical Hand-list of the Members of the Various Inns of Court.
- ↑ "1914 Christmas truce: all quiet on the western front as guns were silenced". The Irish Times. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.