ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட்
சர் ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட் (Hale Horatio Shephard) (1842 - 19 ஏப்ரல் 1921) என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் 1885 இல் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் 1898 இல் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை
தொகுஇவர் ஜான் ஷெப்பார்ட் என்வரின் மகனாவார். இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஏடன் மற்றும் பல்லியோல் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் தன் சட்டப்படிப்பை இன்னர் டெம்பிளில் பயின்றார். 1867 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
தொழில்
தொகுஷெப்பர்ட் 1867 ஆம் ஆண்டு இவர் இந்தியவில் பாரிஸ்டராக வழக்கறிஞர் தொழிலில் நுழைந்தார். 1873 அக்டோபரில் மதராஸ் மாகாணக் கல்லூரியில் சட்டப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1881 இல் மதராஸ் பல்கலைக்கழகத்தின் ஊழியராக நியமிக்கப்பட்டார். 1885 மார்ச்சில், இவர் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
1888 சனவரியில், இவர் மதராஸ் உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1889 சூலையில் நிரந்தரமாக்கப்பட்டார். 1901 சூலையில் இவர் ஓய்வு பெறுவதற்கு முன் 1898 ஆம் ஆண்டில் மதராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
1902 ஏப்ரலில் இவர் இந்திய அரசு தலைமைச் செயலாளரின் சட்ட ஆலோசகராகவும் வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார்.[1]
அவர் 1908 இல் நைட் விருது பெற்றார் .
ஷெப்பர்ட் 1921 ஏப்ரல் 19 அன்று பியாரிட்ஸில் இறந்தார்.
குடும்பம்
தொகுமேஜர்-ஜெனரல் ஜே.டபிள்யூ ரைட்அவுட்டின் மகளான ஆக்னஸ் ரைட்அவுட்ட் என்பரவரை 1876 இல், ஷெப்பார்ட் மணந்தார். இவர்களின் இரண்டாவது மகனான கோர்டன் ஸ்ட்ராச்சி ஷெப்பார்ட் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார், ஆனால் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Times (London) (36751): p. 7. 25 April 1902.