பேபர்ட் மாகாணம்

துருக்கியின் மாகாணம்

பேபர்ட் மாகாணம் (Bayburt Province, துருக்கியம்: Bayburt ili ) என்பது துருக்கியி்ன் ஒரு மாகாணமாகும். இது நாட்டின் வடகிழக்கு அனடோலியா பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பேபர்ட் நகரமாகும். இது 74,412 மக்கள் தொகையுடன் துருக்கியில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது.

பேபர்ட் மாகாணம்
Bayburt ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் பேபர்ட் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பேபர்ட் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிவடக்கு அனதோலியா
துணைப்பகுதிஎர்சுரம்
அரசு
 • தேர்தல் மாவட்டம்பேபர்ட்
பரப்பளவு
 • மொத்தம்3,652 km2 (1,410 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்82,274
 • அடர்த்தி23/km2 (58/sq mi)
தொலைபேசி குறியீடு0458
வாகனப் பதிவு69

மாவட்டங்கள் தொகு

பேபர்ட் மாகாணம் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்த எழுத்தால் காட்டப்பட்டுள்ளது)

 • அய்டான்டெப்
 • பேபர்ட்
 • டெமிராஸோ

வரலாற்று இடங்கள் தொகு

பேபர்ட் மாகாணத்தின் மிக முக்கியமான இடங்கள்: [2]

 • பேபர்ட் டவர்
 • சாருஹான் கோபுரம்
 • அய்டான்டெப் நிலத்தடி நகரம்
 • டெட் கோர்கட்டின் கல்லறை
 • ஷீத் ஒஸ்மானின் கல்லறை
 • பாரம்பரிய பேபர்ட் வீடுகள்
 • உலு பள்ளிவாசல்
 • புலூர் (கோகடெரே) ஃபெராஹாத் பே பள்ளிவாசல்
 • சானர் (Çayıryolu) குட்லு பே பள்ளிவாசல்
 • யுகாரே ஹன்செவெரெக் (Çatalçeşme) பள்ளிவாசல்
 • பெட்ஸ்டன் (மூடப்பட்ட பஜார்)
 • வர்சஹான் ஆர்மீனிய தேவாலயம்

நகரங்களும் ஊர்களும் தொகு

 • பேபர்ட் பெருநகரம் 32.141 இன்.
 • அய்டான்டெப் சிட்டி 2,663 இன்.
 • கோகெடெர் டவுன் 2,389 இன்.
 • டெமிரோஸ் சிட்டி 2,137 இன்.
 • அர்பால் டவுன் 1,934 இன்.
 • கொனூர்சு டவுன் 1,569 இன்.

காலநிலை தொகு

மாகாணத்தில் கோப்பன் காலநிலை அமைப்பால் ஈரப்பதமான கான்டினென்டல் என விவரிக்கப்படுகிறது, இது சுருக்கமாக டி.எஃப்.பி எனப்படுகிறது. [3]

குறிப்புகள் தொகு

 1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
 2. Bayburt Tarihi yerler பரணிடப்பட்டது மே 10, 2012 at the வந்தவழி இயந்திரம் (in துருக்கிய மொழி)
 3. Climate Summary for Bayburt
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபர்ட்_மாகாணம்&oldid=3070506" இலிருந்து மீள்விக்கப்பட்டது