பேபெல்லா

எலும்பு

பேபெல்லா (fabella) என்பது சில பாலூட்டிகளிடம் காணப்படும் ஒரு சிறிய எள் எலும்பு ஆகும். இது தொடை எலும்பின் பக்கவாட்டு தடித்த எலும்பு முனையின் பின்னால் உள்ள தசைநாணில் புதைக்கபட்ட நிலையில் காணப்படுகிறது. இது ஒரு துணை எலும்பு ஆகும். இது 39% மனிதர்களின் உடலில் மட்டுமே காணப்படுகிறது.[1] அரிதாக, இந்த எலும்பு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் இருப்பதுண்டு. பேபேல்லா என்ற சொல்லானது faba 'bean' என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வந்தது.[2]

பேபெல்லா
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os fabella
TA21395
FMA281591
உடற்கூற்றியல்

ஹோமினிடேயின் பரிணாம வளர்ச்சியில் பேபெல்லா மறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், சிம்பன்சிகளிடம் இருந்து பிரிந்த பிறகு அது மனித உடலில் மீண்டும் தோன்றியது. இது 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அல்லது மனித பரிணாம வளர்ச்சியில் அண்மையில் தோன்றியதா என்பது தெரியவில்லை.[3] இந்த எலும்பின் பரிணாம வளர்ச்சியானது மனிதர்களின் மூதாதை இனமான ஆஸ்ட்ராலோபிதேகஸ் நான்கு கால்களில் நடப்பதிலிருந்து இரண்டு கால்களில் நடக்க உதவியதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4]

"பேபெல்லா குருத்தெலும்பு மென்மையாகுதல் அல்லது அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் முதுமை மூட்டழற்சி எனப்படும் கீல்வாதம் ஏற்பட்டு முழங்கால் வலிக்கு காரணமாகலாம்."[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Berthaume, Michael A.; Di Federico, Erica; Bull, Anthony M. J. (April 17, 2019). "Fabella prevalence rate increases over 150 years, and rates of other sesamoid bones remain constant: a systematic review". Journal of Anatomy (Wiley) 235 (1): 67–79. doi:10.1111/joa.12994. பப்மெட்:30994938. 
  2. Egerci, OF; Kose, O; Turan, A; Kilicaslan, OF; Sekerci, R; Keles-Celik, N (2017). "Prevalence and distribution of the fabella: a radiographic study in Turkish subjects". Folia Morphol (Warsz). 76 (3): 478–483. doi:10.5603/FM.a2016.0080. 
  3. Sarin, Vineet K.; Erickson, Gregory M.; Giori, Nicholas J.; Bergman, A. Gabrielle; Carter, Dennis R. (1999). "Coincident development of sesamoid bones and clues to their evolution". The Anatomical Record (Wiley) 257 (5): 174–180. doi:10.1002/(SICI)1097-0185(19991015)257:5<174::AID-AR6>3.0.CO;2-O. 
  4. Fragoso Vargas, Nelly A.; Berthaume, Michael A. (2024-09-11). "Easy to gain but hard to lose: the evolution of the knee sesamoid bones in Primates—a systematic review and phylogenetic meta-analysis" (in en). Proceedings of the Royal Society B: Biological Sciences 291 (2030). doi:10.1098/rspb.2024.0774. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8452. https://royalsocietypublishing.org/doi/10.1098/rspb.2024.0774. 
  5. Dannawi, Z.; Khanduja, V.; Vemulapalli, K.; Zammit, J.; El-Zebdeh, M. (20 January 2010). "Arthroscopic Excision of the Fabella –". Journal of Knee Surgery 20 (4): 299–301. doi:10.1055/s-0030-1248063. பப்மெட்:17993073. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபெல்லா&oldid=4124975" இலிருந்து மீள்விக்கப்பட்டது