பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை

பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை ( Baeyer–Drewson indigo synthesis) என்பது1882 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கரிம வேதியியல் வினையாகும். பொதுவாக இச்சாயம் இண்டிகோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 2 – நைட்ரோபென்சால்டிகைடு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் இண்டிகோ தயாரிக்கப்படுகிறது[1][2].

பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை
பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை

கரிம வேதியியலில் இவ்வினை ஆல்டால் குறுக்கவினை என்று வகைப்படுத்தப்படுகிறது. இவ்வினை வழியாக இண்டிகோ தயாரிக்கப்படும் முறை கைவிடப்பட்டு பெரும்பாலும் தற்பொழுது அனிலீனிலிருந்து தயாரிக்கும் முறை பின்பற்றப்படுகிறது[3]

வினைவழிமுறை தொகு

 
பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை, வினைவழிமுறை

குறிப்புரை தொகு

இவ்வினையின் மூலமான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் டிரிவ்சன் என்றாலும் ஆங்கிலப் புத்தகங்களில் இம்முறை பொதுவாக பேயர்- டிரிவ்சன் வினை என்ற பெயராலேயே குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Adolf Baeyer, Viggo Drewsen (1882). "Darstellung von Indigblau aus Orthonitrobenzaldehyd". Berichte der deutschen chemischen Gesellschaft 15 (2): 2856–2864. doi:10.1002/cber.188201502274. 
  2. Helmut Schmidt (1997). "Indigo – 100 Jahre industrielle Synthese". Chemie in unserer Zeit 31 (3): 121–128. doi:10.1002/ciuz.19970310304. 
  3. Elmar Steingruber "Indigo and Indigo Colorants" Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2004, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a14_149.pub2 10.1002/14356007.a14_149.pub2

வெளி இணைப்புகள் தொகு