பேயில்டோனைட்டு

ஆர்சனேட்டுக் கனிமம்

பேயில்டோனைட்டு (Bayldonite) என்பது PbCu3(AsO4)2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய இரண்டாம்நிலை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து நாட்டிலுள்ள கோர்ன்வால் மாகாணத்தில் இருக்கும் பென்பெர்த்தி கிராப்ட் சுரங்கத்தில் முதன் முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது[4] . யோன் பேயில்டான் இக்கனிமத்தை கண்டறிந்த காரணத்தால் பேயில்டோனைட்டு என்று பெயர் சூட்டப்பட்டது[5] அமெரிக்காவின் அரிசோனா, நமீபியாவின் திசுமெப் போன்ற இடங்களிலும் கனிம மாதிரிகள் கிடைத்தன. சில சமயங்களில் இதை மணிக்கற்களாகவும் பயன்படுத்துகிறார்கள்[6].

பேயில்டோனைட்டுBayldonite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுPbCu3(AsO4)2(OH)2
இனங்காணல்
நிறம்பச்சை,ஆப்பிள் பச்சை
படிக இயல்புமார்பு போன்ற மேலோடு
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை4 12
மிளிர்வுபிசின் தன்மை
அடர்த்தி5.24–5.65 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது), 5.707 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Mineralienatlas
  2. "Bayldonite Mineral Data". Webmineral. Archived from the original on 7 June 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
  3. "Bayldonite mineral information and data". Mindat. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
  4. Thomas, Arthur (2008). Gemstones: properties, identification and use. New Holland Publishers. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84537-602-4. https://books.google.com/books?id=MPZK8ILOSR0C&pg=PA159. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. A. H. Church: XLI.—Chemical researches on some new and rare cornish minerals. In: Journal of the Chemical Society, 1865, 18, S. 259-268, எஆசு:10.1039/JS8651800259.
  6. Gemstones: Properties, Identification and Use By Arthur Thomas, p.159
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயில்டோனைட்டு&oldid=3654470" இலிருந்து மீள்விக்கப்பட்டது