பேயோடு

இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

பேயோடு (Peyod) என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது நாகர்கோவிலிலிருந்து குளச்சல் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை மற்றும் முட்டம் ஆகியவை பேயோடு கிராமத்திற்கு அருகிலுள்ள ஊர்களாகும். 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்குள்ள மொத்த மக்கள்தொகை 586 ஆகும். இதில் 10 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர். பேயோடு கிராமத்தின் எழுத்தறிவு 73 சதவீதம் ஆகும். இதில் ஆண்கள் 79 சதவீதம் பெண்கள் 67 சதவீதம் ஆவர். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.

பத்ரகாளியம்மன் கோவில், பேயோடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயோடு&oldid=2374326" இலிருந்து மீள்விக்கப்பட்டது