பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில்
பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்திலுள்ள சிவன் கோயில் ஆகும். [1]
பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பேரளம் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுயம்புநாதசுவாமி |
தாயார்: | பவானி |
அமைவிடம்
தொகுகும்பகோணம்-காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்குத் தெற்கே 3 கிமீ தொலைவில் பேரளத்தில் உள்ளது. [2]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் சுயம்புநாதசுவாமி, இறைவி பவானி.
அமைப்பு
தொகுஇக்கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தக் கிணறுகள் உள்ளன. [1] அக்னி தீர்த்தம் கோயிலுக்குக் கீழே உள்ளது. ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, மூலவர் சன்னதி, இறைவி சன்னதியுடன் இக்கோயில் உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது.
வழிபட்டோர்
தொகுபேரள முனிவர், யாக்ஞவல்கியர், சுக்ராச்சாரியார், மார்க்கண்டேயர், விசுவாமித்திரர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டோர் ஆவர். [2]