பேரியம் பெரேட்டு
பேரியம் பெர்ரேட்டு (Barium ferrate) BaFeO4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இச்சேர்மத்தில் இரும்பின் ஆக்சிசனேற்ற எண் +6 நிலையாக உள்ளது.[1]. பேரியம் பெர்ரேட்டு நான்முக [FeO4]2− எதிர் அயனியைக் கொண்டு பேரியம் சல்பேட்டிற்கு சமமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் பெர்ரேட்டு(VI)
| |||
வேறு பெயர்கள்
பேரியம் பெர்ரேட்டு(2-)
| |||
இனங்காட்டிகள் | |||
13773-23-4 | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
BaFeO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 257.17 g·mol−1 | ||
தோற்றம் | அடர் சிவப்பு , ஒளிபுகா படிகங்கள் | ||
கரையாது | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு மற்றும் வேதியியல்
தொகுபொட்டாசியம் பெரேட்டு மற்றும் பேரியம் குளோரைடு இவற்றின் கரைசலில் இருந்து நீரற்ற பேரியம் பெரேட்டு வீழ்படிவாக்கல் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது.[3]. ஆக்சிசனேற்றியான பேரியம் பெரேட்டை கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சிசனேற்ற சோதனைப் பொருளாகப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ J. G. R. Briggs (2005). Longman A-level course in chemistry (4th ed.). Pearson Education South Asia. p. 536. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4105-08-2.
- ↑ Wells, A.F. (1986). Structural inorganic chemistry (5th ed.). Oxford [Oxfordshire]: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-855370-0.
- ↑ Gump, J. R.; Wagner, W. F.; schreyer, J. M. (1 டிசம்பர் 1954). Analytical Chemistry 26 (12): 1957–1957. doi:10.1021/ac60096a027.
- ↑ Firouzabadi, H.; Mohajer, D.; Entezari-moghaddam, M.. "Barium Ferrate Monohydrate BaFeO4·H2O, A Versatile Reagent for the Oxidation of Organic Compounds under Aprotic Condiiton". Synthetic Communications 16 (6): 723–731. doi:10.1080/00397918608057745.