பெர்த் சிவன் கோயில்
பேர்த் சிவன் கோயில் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகரான பேர்த்தில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில்.
பெர்த் சிவன் கோவில் Perth Shiva Temple | |
---|---|
பெர்த் சிவன் கோவில் கோபுரம் | |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பெர்த் இந்து கோவில் |
அமைவிடம் | |
நாடு: | ஆத்திரேலியா |
மாநிலம்: | மேற்கு ஆத்திரேலியா |
அமைவு: | 271 வார்ட்டன் சாலை, கேனிங் வேல் டபிள்யூ ஏ 6155 |
ஆள்கூறுகள்: | 32°05′00.1″S 115°56′58.6″E / 32.083361°S 115.949611°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | hindu |
வரலாறு
தொகுபேர்த்தில் ஒரு இந்துக் கோயில் அமைப்பதற்காக காணியொன்றை வாங்கும் திட்டம் 1986, ஆகத்து 10-ஆம் திகதி நடைபெற்ற பேர்த் இந்து சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1987 செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 அம்ம் திகதி வரை நடைபெற்ற நவராத்திரி பூசையின் போது சுவாமி சாந்தானந்ஜீ கோயிலுக்காக வாங்கப்பட்ட காணியைப் புனிதப்படுத்தினார். 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயில் மண்டபம் கட்டும் பணி ஆரம்பமாகியது. ஒரு வருடத்துக்குள் மண்டபம் நிறைவுற்று 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 7-9 ஆம் திகதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அமைப்பு
தொகுசிவலிங்கம், அம்மன், விநாயகர் ஆகிய விக்கிரகங்கள் முதலில் அங்கு தாபிக்கப்பட்டன. ஒரு சீன அன்பரால் வழங்கப்பட்ட அநுமன் விக்கிரகம் 1990 ஆம் ஆண்டு இராம நவமியின் போது தாபிக்கப்பட்டது. சுவாமி அரிதாஸ் கிரியால் அனுப்பி வைக்கப்பட்ட அவரவர் தேவிகளோடு கூடிய விஷ்ணு, முருகன் விக்கிரகங்கள் 1993 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி குரு பூர்ணிமாவில் தாபிக்கப்பட்டன.
புதிய கோயில் அமைப்பு
தொகுபேர்த்தில் இந்துக்களின் தொகை அதிகரிக்கவே கோயில் பெரிதாக அமைய வேண்டிய தேவை எழுந்தது. அப்போது உள்ள மண்டபத்தை பரபார்ந்த கோயிலாக மாற்றிக் கட்டுவதா அல்லது புதிதாகக் கோயில் அமைப்பதா என்ற கேள்வி எழுந்தது. புதிய கோயில் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டு மரபார்ந்த கோயிலைப் போல ஒரு பிரதம தெய்வமும் பரிவார தெவங்களாகவும் அமைக்காது ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே விதமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோயில் அமைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. 1998 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விநாயகர், அம்மன், முருகன், சிவலிங்கம், இலட்சுமி சமேதரராக நாராயணன் ஆகிய தெய்வங்கள் தாபிக்கப்பட்டு ஒவ்வொரு தெய்வத்துக்குரிய சிறப்பு நாட்களுக்கு சிறப்புப் பூசைகளும் நடத்தப்படுகின்றன.