பேலஸ் ஆன் வீல்ஸ்
பேலஸ் ஆன் வீல்ஸ் (Palace on Wheels, சக்கரத்தில் மாளிகை எனப் பொருள்படும்.) இந்திய இரயில்வேயில் உள்ள நான்கு சொகுசுத் தொடர்வண்டிகளில் ஒன்றாகும்.[1][2][3]
பேலஸ் ஆன் வீல்ஸ் | |
---|---|
ஆரம்பித்த நாள் | ஜனவரி 26, 1982 - தற்போது வரை |
இயக்குபவர் | இந்தியன் இரயில்வே |
Line(s) served | dot |
இது புது தில்லியில் இருந்து புறப்படுகிறது. இதன் எட்டுப் பயண நாட்களில், ஜெய்ப்பூர், ஜெய்சால்மீர், ஜோத்பூர், சவாய் மதோபூர், சித்தார்கார், உதய்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களின் வழியாக செல்கிறது. இதன் பெரும்பான்மையான பயணம் இராஜஸ்தான் மாநிலத்தினுள் உள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக, முக்கிய சுற்றுலாத் தலங்களான, ஹவா மஹால் (The Palace of Winds, காற்று மாளிகை), இராத்தோம்போர் தேசிய பூங்கா, ஜக் நிவாஸ் (ஏரி மாளிகை, Lake Palace), ஜக் மந்திர் (நகர மாளிகை, City Palace), கியோலடியோ தேசிய பூங்கா மற்றும் தாஜ் மஹால் ஆகியவை காண்பிக்கப் படுகின்றன.
பேலஸ் ஆன் வீல்ஸ் முழுவதும் குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட, அழகூட்டப்பட்ட 14 சொகுசு இரயில் பெட்டிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் முந்தைய இராஜபுதன அரசாங்கத்தின் மாநிலங்களின் பெயரில் அழைக்கப்படுகின்றன. "The Maharaja" (பேரரசர்), "The Maharani" (பேரரசி) என்ற பெயர்களில் இரண்டு ஆடம்பர உணவகங்கள் இதில் உள்ளன.
சில காலத்துக்கு முன்பு இதில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பயண விலை அமெரிக்க டாலர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்பு
தொகு- இந்திய இரயில்வே இணையத்தளம் (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "NPalace on wheels - Exclusive Indian train was originally used by royalty". Times of India. 13 October 2012 இம் மூலத்தில் இருந்து 17 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017234123/http://www.vancouversun.com/travel/Palace+wheels/7386580/story.html.
- ↑ Pena, R (17 November 2022). "Here's An Inside Look At India's First Luxury Train". Yahoo News. https://news.yahoo.com/heres-inside-look-indias-first-211333250.html.
- ↑ Rajesh, Monisha (5 February 2023). "Four of the best luxury sleeper trains in India" (in en-gb). National Geographic. https://www.nationalgeographic.co.uk/travel/2023/02/four-of-the-best-luxury-sleeper-trains-in-india. "Launched in 1982, the Palace on Wheels is the original luxury train"