பைகி நடனம்
பைகி நடனம் (Paiki dance) பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சார்க்கண்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டானக்பூர் பீடபூமி பகுதியின் சதானி நாக்புரி தற்காப்பு நாட்டுப்புற நடனம் ஆகும்.[1][2][3][4] இந்நடனத்தின் போது, மக்கள் வேட்டி, மயில் இறகுகள் கொண்ட தலைப்பாகை அணிவார்கள். இவர்கள் வலது கையில் வாளையும், இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி நாகரா, தக், செனாய் மற்றும் நரசிங்கின் இசைக்கருவிகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள்.[3][5] இதில் ஆண்களே நடனமாடுவார்கள். இதில் ஆண்களின் வீரம் பிரதிபலிக்கிறது. பைகி நடனம் திருமணம் மற்றும் பிற விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.[6][7] இடைக்காலத்தில் பாய்க் என்பது இடைக்காலத்தில் தரைப்படை வீரர்களைக் குறித்தது.[5][6] இந்நடனம் முதன்மையாக சோட்டா நாக்பூரில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியின் போது தரைப்படை வீரர்களாக இருந்த ரௌதியாக்களால் நிகழ்த்தப்பட்டது.[1] இது குந்தி மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சில முண்டா பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "बख्तर साय मुंडल सिंह के बताए राह पर चलें". https://www.bhaskar.com/jharkhand/gumla/news/go-on-the-trail-as-told-by-saqar-mundal-singh-062023-4307550.html.
- ↑ Dance in India: An Annotated Guide to Source Materials. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ 3.0 3.1 Jharkhand General Knowledge 2022. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ Jharkhand Digdarshan. பார்க்கப்பட்ட நாள் 3 November 2022.
- ↑ 5.0 5.1 Ranjit Biswas (2020). "Military Technology of Medieval India -Special Emphasis on Prior of the Mughal Empire". academia.edu. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ 6.0 6.1 "Folk Dances of Jharkhand – True Essence of Folk Culture". caleidoscope. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ "आदिवासी नृत्य महोत्सव में झारखंड की गूंज, पाइका लोक नृत्य की शानदार प्रस्तुति". etvbharat. 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ "खूंटी : खूंटी की पाइका नृत्य का रूस ने माना था लोहा". https://www.livehindustan.com/jharkhand/ranchi/story-peg-russia-accepted-the-iron-of-peg-39-s-paika-dance-6115470.html.
- ↑ N, Eshani; y. "Paika Dance of the Munda Tribe" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.