பைதாகி மிளகாய்
பைதாகி மிளகாய் (Byadgi chilli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக விளங்கும் மிளகாய் வகையாகும். கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் அமைந்துள்ள பைதாகி நகரத்தின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது.[1] இந்தியாவின் அனைத்து மிளகாய் வகைகளிலும் பைதாகி மிளகாயின் வணிகமானது இரண்டாவது மிகப்பெரிய விற்றுமுதல் ஆகும்.[2] இந்த மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும், ஓலியோரெஸினைக் கொண்டு நகப்பூச்சு மற்றும் உதட்டுச் சாயம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. பைதாகி மிளகாய் அதன் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்காகவும், குறைந்தளவு காரத்திற்காகவும் இது தென்னிந்தியாவின் பல உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 2011 இல் பைதாகி மிளகாய்க்கு புவியியல் குறியீடு (ஜி.ஐ.ஐ.) வழங்கப்பட்டது.[3] அதன்புவிக்குறியீட்டு எண் 144 ஆகும்.[4]
பைதாகி மிளகாய் தப்பி மற்றும் காட்டி என்ற இரண்டு வகைகளில் விளைகிறது: பைதாகி தப்பி, இது சிறிய மற்றும் தடிமனானது; அதன் நிறம், மற்றும் சுவைக்கு மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. இதில் அதிக விதைகள் இருந்தாலும், அது காட்டி வகைகளுடன் ஒப்பிடும்போது குறைவான காரத்தை அளிக்கும். மசாலா தயாரித்தல் மற்றும் ஓலோரெஸினைப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு இந்த வகை சிறந்தது. பல புகழ்பெற்ற உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு இந்த வகைகளை விரும்புகின்றன. ஒப்பனைப் பொருட்கள் மத்தியில், இது முக்கியமாக நகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. காட்டி வகை கரடு முரடான, மெலிந்த, நீண்ட மற்றும் குறைவான விதைகள் கொண்டது.
பயன்கள்
தொகுஉணவு
தொகுபிசிபேளாபாத், சாம்பார், சட்னி மற்றும் தென்னிந்தியாவின் மற்ற உணவுப் பொருட்கள் போன்ற மசாலா தயாரிப்புகளில் பைதாகி மிளகாய் முக்கியமான ஒரு பொருளாக உள்ளது. இது உடுப்பி சமையல் வகைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது இறைச்சி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் அது இறைச்சிக்கு பிரகாசிக்கும் சிவப்பு வண்ணம் தருகிறது.[5] இந்த வகயினை மிளகாய்த் தூளாக, உணவுப் பொருட்கள் மசாலா பொருட்களைத் தயாரிக்கும் எம்.டி.ஆர் போன்ற உற்பத்தியாளர்களிடம் விற்பனை செய்வதில் 25 நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
ஓலியோரெஸின்
தொகுமுன்னதாக பைதாகி மிளகாய் முக்கியமாக ஒரு காரமான மூலப்பொருளாக உணவு பொருட்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் சமீபத்தில், இதிலிருந்து ஒலோரிஸின் என்ற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. ஒலோரிஸின் நகப்பூச்சு மற்றும் உதட்டுச் சாயம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய் காய்களை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒலோரிஸின் பிரித்தெடுக்கும் பணிக்காக பைதாகியில் குளிர் சேமிப்பு கிடங்கு உருவாக வழிவகுத்தது.[5] குளிர் சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதன் மூலம், 30-40 சதவிகிதம் ஒலோரிஸின் அளவு அதிகரிக்கிறது. 1 டன் பைதாகி மிளகாயிலிருந்து ஒல்லோரிஸின் சுமார் 50 லிட்டர் எடுக்கலாம். ஒல்லோரிஸின் பிரித்தெடுக்கப்படுவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த ஒல்லோரிஸின் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது, அங்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னர் அது இன்னும் சுத்திகரிக்கப்படுகிறது.[5] .[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Focus on entrepreneurship to boost rural development". Online Edition of The Hindu, dated 20 June 2007 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001063658/http://www.hindu.com/2007/06/20/stories/2007062074020300.htm.
- ↑ "Spice players put blame on British customs". Online Edition of The Times of India, dated 21 February 2005. http://timesofindia.indiatimes.com/business/india-business/spice-players-put-blame-on-british-customs/articleshow/1027756.cms.
- ↑ "Scotch whisky, Karnataka's Byadgi Chilli get GI tag - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103081815/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/chennai/28551625_1_gi-tag-scotch-whisky-whisky-industry.
- ↑ இந்தியாவில் புவியியல் அடையாளங்களின் பட்டியல்
- ↑ 5.0 5.1 5.2 Lokeshvarappa N. "Red Hot Chilli Peppers". Online Edition of The Deccan Herald, dated 2007-06-19. The Printers (Mysore) Pvt. Ltd. Archived from the original on 21 June 2007. பார்க்கப்பட்ட நாள் 26 July 2007.
- ↑ "Byadagi chilly not hot anymore". Online Edition of The Deccan Herald, dated 2005-06-19. The Mysore (Printers) Pvt. Ltd. Archived from the original on 29 September 2007. பார்க்கப்பட்ட நாள் 26 July 2007.