பைமண்டைட்டு

கனிமம்

பைமண்டைட்டு (Piemontite) என்பது Ca2(Al,Mn3+,Fe3+)3(SiO4)(Si2O7)O(OH).[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சுப் படிகத்திட்டத்தில் உருவாகும் சோரோசிலிக்கேட்டு வகைக் கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. எபிடோட்டு குழு வகையில் இடம்பெற்றுள்ள தனிமங்களில் பைமண்டைட்டு கனிமமும் ஒர் உறுப்பினராகும்[3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பைமண்டைட்டு கனிமத்தை Pmt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பைமண்டைட்டு
Piemontite
இத்தாலியின் பிரபோர்னாசு சுரங்க பைமண்டைட்டு
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டுகள்
எபிடோட்டு
வேதி வாய்பாடுCa2(Al,Mn3+,Fe3+)3(SiO4)(Si2O7)O(OH)
இனங்காணல்
படிக இயல்புமெல்லிய பட்டகம், பெருத்தும் தொகுதிகளாகவும்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்[100] இல் பொதுவற்றது
பிளப்பு[001] நன்று, [100] தனித்துவம்
முறிவுசமமற்றும் தட்டையாகவும்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6 - 6.5
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
அடர்த்தி3.46 - 3.54
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+) 2V = 64 - 106
ஒளிவிலகல் எண்nα = 1.725 - 1.756 nβ = 1.730 - 1.789 nγ = 1.750 - 1.832
இரட்டை ஒளிவிலகல்δ = 0.025 - 0.076
பலதிசை வண்ணப்படிகமைபார்க்கலாம்
நிறப்பிரிகைr>v வலிமையானது
மேற்கோள்கள்[1][2][3]

சிவப்பும் செம்பழுப்பும் கலந்த வண்ணத்தில் அல்லது கருஞ்சிவப்பு வண்ணம் கொண்டதாக பைமன்டைட்டு தோன்றுகிறது. கணாணாடி போல பளபளப்பை வெளிபடுத்துகிறது[3]. இத்தாலி நாட்டிலுள்ள ஆசுட்டா சமவெளி மண்டலத்தின் செயிண்ட்-மார்செல் நகரில் அமைந்துள்ள பிரபோர்னாசு சுரங்கத்தில் முதன் முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது[3].

கிரீன்சிசுட்டு, ஆம்பிபோலைட்டு போன்ற உருமாற்றத் தோற்றம் கொண்ட உருமாறிய பாறைகளிலும், உருமாறிய எரிமலைப் பாறைகளின் தாழ்வெப்பநிலை நீர்வெப்ப நரம்புகளிலும் பைமண்டைட்டு காணப்படுகிறது. மாங்கனீசு கனிமத்தின் உருமாற்ற தொடுகைப் பாறைகளிலும் இக்கனிமம் காணப்படுகிறது.எபிடோட்டு, திரெமோலைட்டு, கிலாவ்கோபேன், ஆர்த்தோகிளேசு, குவார்ட்சு மற்றும் கால்சைட்டு போன்ற கனிமங்கள் பைமன்டைட்டுடன் பெரும்பாலும் கலந்து காணப்படுகின்றன[1].

தென் ஆப்பிரிக்காவில் கிடைத்த குவார்ட்சின் மீது பைமண்டைட்டு. அளவு: 7.1 x 3.0 x 2.6 cm.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
  2. Webmineral.com website
  3. 3.0 3.1 3.2 3.3 Mindat reference page for Piemontite
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைமண்டைட்டு&oldid=3938844" இலிருந்து மீள்விக்கப்பட்டது