பையனூர் (தமிழ்நாடு)

பையனூர் (Payanoor) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மகாபலிபுரம் அருகில் பழைய மகாபலிபுரம் வீதியில் அமைந்துள்ளது.[1] ஆயிரமாண்டுகளுக்கு மேல் பழைமையான எட்டீசுவரர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது[2]

பையனூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 19

அமைவிடம்

தொகு

பையனூர், மாநில நெடுஞ்சாலை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும், புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மகாபலிபுரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்போரூர் தாலுக்காவில்[3] இக்கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் வரை பையனூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Payanoor". Google Maps. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  2. http://temple.dinamalar.com/New.php?id=1562
  3. "Delimitation of Village Panchayat Ward" (PDF). Kancheepuram District. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையனூர்_(தமிழ்நாடு)&oldid=3901708" இலிருந்து மீள்விக்கப்பட்டது