பையூரெட் சோதனை

பையூரெட் சோதனை (Biuret test) அல்லது பயோட்ரோவ்சுகி சோதனை (Piotrowski's test)[1]) என்பது, பெப்டைடு இணைப்புகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு வேதியியல் சோதனையாகும்.  காரக் கரைசலொன்றில் பெப்டைடுகளின் முன்னிலையில்  தாமிர(II) அயனிகள்  ஊதாநிற அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன.[2] இச்சோதனையானது, பல வடிவங்களில், வகைகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக BCA சோதனை மற்றும் மாற்றப்பட்ட லோரி சோதனை போன்றவை இதன் மாற்றப்பட்ட வடிவங்களாகும்.[3]

A test tube containing a clear violet solution
பையூரெட் சோதனையில் நேர்மறை முடிவிற்கான குறிப்பிடத்தக்க நிறம்

புரதங்களின் செறிவினை மதிப்பிடுவதற்கு பையூரெட் வினை பயன்படுத்தப்படலாம், ஏனெனில் பெப்டைடு பிணைப்புகள் அமினோ அமிலத்தில் காணப்படும் பெப்டைடு இணைப்புகளின் அதே எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். பீர்-லாம்பர்ட் விதியின்படி, நிறத்தின் செறிவு, மற்றும் 540 நேனோ மீட்டரில் உட்கவர்தன்மை போன்றவை புரதத்தின் செறிவுடன் நேர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.

சோதனையானது பையூரெட்டின் பெயரைக் கொண்டிருப்பினும், வினைக்காரணி பையூரெட்டைக் ((H2N-CO-)2NH) கொண்டிருப்பதில்லை. பெப்டைடு போன்ற பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்களுக்கு இந்த வினை நேர்மறையான முடிவைத் தருவதால் இந்தப் பெயரானது சூட்டப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் தாமிர(II) அயனிகள் பெப்டைடு பிணைப்பில் உள்ள நைட்ரசனுடன் இணைந்து கொள்கின்றன.  இரண்டாம் நிலை வினையொன்றில் தாமி (II) அயனியானது தாமிர(I) அயனியாக ஒடுக்கப்படுகிறது. தாங்கல் கரைசல்களான அம்மோனியா மற்றும் டிரிசு ஆகியவை இந்தச் சோதனையில் குறுக்கிடுவதால், அம்மோனியம் சல்பேட்டு வீழ்படிவாக்கல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட புரத மாதிரிகளுக்கு இந்த முறை பொருத்தமற்றவையாக உள்ளது.  தனித்த அமினோ அமிலங்களின் இந்த வினைக்கு பதிலளிக்காத் தன்மை மற்றும் மிகவும் சிறிய அளவிலான குறுக்கீடு போன்ற காரணங்களால், இந்தச் சோதனையானது முழுமையான திசு மாதிரிகள் மற்றும் அதிக புரதச் செறிவைக் கொண்ட மாதிரிகளுக்கு மிகுந்த பயனளிப்பவையாக உள்ளன.[4]

செய்முறை

தொகு

சோதிக்கப்பட வேண்டிய மாதிரியின் நீர்த்த கரைசலானது சம கன அளவுள்ள 1% வலிமையான காரத்துடன் (சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடு) வினைப்படுத்தப்பட்டு அதனுடன் நீரிய தாமிர (II) சல்பேட்டானது சேர்க்கப்படுகிறது. கரைசலானது கருஞ்சிவப்பாக மாறினால் மாதிரியானது புரதத்தைக் கொண்டுள்ளது. 5–160 மிகி/மிலி ஆனது கண்டறியப்படலாம். குறைந்தது 3 அமினோ அமிலங்களின் நீளத்திற்கு குறையாத பெப்டைடு இணைப்புகள் இந்த வினைப்பொருட்களுடன் குறிப்பிடத்தகுந்த, அளவிடுவதற்குரிய நிற மாற்றத்தைத் தர அவசியமானதாய் உள்ளது.[5]

பையூரெட் வினைக்காரணி

தொகு

பையூரெட் வினைக்காரணியானது சோடியம் ஐதராக்சைடு (NaOH) மற்றும் நீரேற்றப்பட்ட தாமிர(II) சல்பேட்டு, பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டு (Chemical Reagents பரணிடப்பட்டது 2010-02-13 at the வந்தவழி இயந்திரம்) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டானது தாமிர (II) அயனிகளை இடுக்கிப் பிணைப்பில் ஈடுபடச்செய்வதன் மூலம் நிலைப்புத்தன்மை பெறச் செய்வதற்காக சேர்க்கப்படுகிறது. கார நிலையில், தாமிர (II) அயனிகள் பெப்டைடு பிணைப்புகளில் உள்ள நைட்ரசன் அணுக்களுடன் வினைபுரிவது பெப்டைடு ஐதரசன் அணுக்களை இடப்பெயர்ச்சி செய்ய வழிவகை செய்கிறது. மூன்று அல்லது நான்கு முனை இடுக்கிப் பிணைப்புகளால் பெப்டைடு பிணைப்பின் நைட்ரசனுடன் உருவாகும் வளைய உருவாக்கம் பையூரெட்டின் நிறத்தைத் தருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Charles William Hale: Domestic Science.
  2. The reaction was first observed 1833: Ferdinand Rose (1833) "Über die Verbindungen des Eiweiss mit Metalloxyden" (On the compounds of albumin with metal oxides), Poggendorfs Annalen der Physik und Chemie, vol. 104, pages 132-142, எஆசு:10.1002/andp.18331040512.
  3. “Chemistry of Protein Assay” Thermo Scientific Protein Methods Library. http://www.piercenet.com
  4. Ninfa, Alexander; Ballou, David; Benore, Marilee (2009). Fundamental Laboratory Approaches for Biochemistry and Biotechnology. Wiley. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470087664. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  5. Fenk, C. J.; Kaufman, N.; and Gerbig, D. G. J. Chem. Educ. 2007, 84, 1676-1678.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையூரெட்_சோதனை&oldid=3222853" இலிருந்து மீள்விக்கப்பட்டது