பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி
பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி (Ponguleti Sudhakar Reddy) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். [1] இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைக் குழு உறுப்பினராகவும், முன்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயலாளராகவும் இருந்தார். [2] [3]
பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நாராயணபுரம் கிராமம் , கல்லூர், கம்மம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கீதா ரெட்டி |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | ஐதராபாத்து |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுதாகர் ரெட்டி தெலங்காணாவில் உள்ள கம்மம் கல்லூர் மண்டலத்தில் உள்ள நாராயணபுரத்தில் இலட்சுமரெட்டி மற்றும் நாகம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
காங்கிரசு கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி இருந்தார். [4] ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியன் வங்கியின் பகுதி நேர அதிகாரப்பூர்வமற்ற இயக்குநராக இருந்தார். உலக அமைதிக்கான அனைத்து மத மற்றும் சர்வதேச கூட்டமைப்பால் "உலக அமைதிக்கான தூதுவராக" நியமிக்கப்பட்டுள்ளார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். [5] 2019இல் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [6] [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archive News". தி இந்து. 2011-01-25. Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Congress decries T political JAC deadline - Times of India". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Rosaiah Condemns Jagan's Channel Attacking Sonia". Outlook India. http://news.outlookindia.com/items.aspx.
- ↑ "Archive News". தி இந்து. 2009-09-30. Archived from the original on 2009-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Stocks - Bloomberg". பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ponguleti Sudhakar Reddy quits Congress to join BJP". The Hindu. 1 April 2019. https://www.thehindu.com/news/national/telangana/ponguleti-sudhakar-reddy-quits-congress-to-join-bjp/article26696040.ece. பார்த்த நாள்: 6 April 2021.
- ↑ "Ponguleti Sudhakar Reddy joins BJP". Telangana Today. 31 March 2019. https://telanganatoday.com/ponguleti-quits-congress-says-party-steeped-in-corruption-in-state. பார்த்த நாள்: 6 April 2021.