பொட்டங்கி ஒல்லார் கடாபா மொழி


ஒல்லார் பொட்டாங்கி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15,000 மக்களால் பேசப்படுகிறது. ஒல்லார் கடாபா, ஒல்லாரி, ஒல்லாரோ, ஹல்லாரி, ஹொல்லார் கட்பாஸ், சான் கடாபா, கடாபா, சானோ, கோண்டேகார், கோண்ட்கோர் போன்ற மாற்றுப் பெயர்களிலும் இது குறிப்பிடப்பட்டு வருகிறது. இது புழங்கும் இரண்டு மாநிலங்களிலுமாக 5 கிளைமொழிகள் அறியப்பட்டுள்ளன.

பொட்டங்கி ஒல்லார் கடாபா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15,000 (2000)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gdb

ஒரியா எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றில் எழுதப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோர் அன்றாட நடவடிக்கைகளின் பல துறைகளிலும் தங்கள் மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமது மாநிலத்தின் முதன்மை மொழிகளில் சிறப்பான அறிவு பெற்றவர்கள் அல்ல.

இவற்றையும் பார்க்கவும்

தொகு