பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Potassium hexafluorotitanate) என்பது K2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு(IV), இருபொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு, தைட்டானியம் பொட்டாசியம் அறுபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
16919-27-0 | |
ChemSpider | 9239654 |
EC number | 240-969-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11064502 |
| |
பண்புகள் | |
F6K2Ti | |
வாய்ப்பாட்டு எடை | 240.05 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
உருகுநிலை | 780 °C (1,440 °F; 1,050 K) |
கொதிநிலை | 235–237 °C (455–459 °F; 508–510 K) |
சூடான நீரில் கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH302, H317, H318 | |
வார்ப்புரு:PPhrases | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரோபுளோரிக் அமிலம் மெட்டாதைட்டானிக் அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து புளோரோதைட்டானிக் அமிலத்தை உருவாக்குகிறது; பின்னர் இது பொட்டாசியம் ஐதராக்சைடுடன் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபட்டு பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுவெள்ளை நிறத் தூளாக பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு உருவாகிறது.[4] இது சூடான நீரில் கரையும். கனிம அமிலங்களிலும் குளிர்ந்த நீரிலும் சிறிதளவு கரையும். அம்மோனியாவில் கரையாது.[5]
வேதிப் பண்புகள்
தொகுசோடியத்துடன் வினைபுரிந்து சோடியம் மோனோபுளோரைடையும் , பொட்டாசியத்துடன் வினைபுரிந்து பொட்டாசியம் மோனோபுளோரைடையும் கொடுக்கும்.:[6][7]
-
- K2TiF6 + 4Na → Ti + 2KF + 4NaF
பயன்கள்
தொகுபொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு ஒரு பகுப்பாய்வு மறுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தைட்டானிக் அமிலம் மற்றும் உலோக தைட்டானியம் ஆகியவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாலிபுரோப்பைலீன் தொகுப்பு வினையில் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உலோக பாசுப்பேட்டு மேற்பரப்பு சரிசெய்தல் செயல்முறையின் ஓர் அங்கமாகவும் உள்ளது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dipotassium hexafluorotitanate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium hexafluorotitanate(IV)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium Hexafluorotitanate(IV)". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium hexafluorotitanate, 97%, Thermo Scientific Chemicals". [Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "The reaction of interaction of hexafluorotitanate and sodium with the formation of the titanium, potassium fluoride and sodium fluoride". chemiday.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Ermakov, A. A.; Kliment'Eva, G. A.; Andrianov, A. M.; Brusilovskii, Yu. E.; Kovalevskaya, I. P. (28 January 1997). "ChemInform Abstract: Reaction of Potassium Hexafluorotitanate with Sodium, Potassium and Ammonium Hydroxides and Carbonates.". ChemInform 28 (5). doi:10.1002/chin.199705020. https://www.researchgate.net/publication/250562232.
- ↑ "POTASSIUM HEXAFLUOROTITANATE(IV)". chembk.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.