பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு
பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு (Potassium octachlorodimolybdate) என்பது K4Mo2Cl8 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் பிசு (நாற்குளோரிடோமாலிப்டேட்டு) என்பது இதனுடைய வேதிமுறைப் பெயராகும். இச்சேர்மத்தின் வேதி வாய்ப்பாட்டை K4[Cl4MoMoCl4]) என்றும் எழுதுவர். சிவப்பு நிறத்துடன் நுண்படிகத் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் பொதுவாக இளஞ்சிவப்பு நிற இருநீரேற்றாக கிடைக்கிறது. முற் காலத்தில் இவ்வெதிர்மின் அயனி நான்மடி பிணைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்பட்டது.
இனங்காட்டிகள் | |
---|---|
25448-39-9 | |
பண்புகள் | |
H4Cl8K4Mo2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 631.9 கி/மோல் |
தோற்றம் | சிவப்புநிற படிகங்கள் |
அடர்த்தி | 2.54 கி/செ.மி3 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் அறுகார்பனைலில் இருந்து இரண்டு படிநிலைகளில்:[1][2] பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டைத் தயாரிக்க முடியும்.
- 2 Mo(CO)6 + 4 HO2CCH3 → Mo2(O2CCH3)4 + 2 H2 + 12 CO
- Mo2(O2CCH3)4 + 4 HCl + 4 KCl → K4Mo2Cl8 + 4 HO2CCH3
அசிட்டேட்டுடன் HCl புரியும் வினை மும்மாலிப்டினம்[3] சேர்மங்களுக்கு வழிசெய்வதாக முதலில் விவரிக்கப்பட்டது. ஆனால் விளைபொருளில் Mo2Cl4– 8 அயனி D4h சீரொழுங்குடனும், Mo—Mo பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.14 Å. ஆகவும் காணப்படுவதை அடுத்து நிகழ்ந்த படிக அமைப்பு ஆய்வியல் உறுதி செய்தது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ A. B. Brignole, F. A. Cotton, Z. Dori (1972). Rhenium and Molybdenum Compounds Containing Quadruple Bonds. "Inorganic Syntheses". Inorg. Synth.. Inorganic Syntheses 13: 81–89. doi:10.1002/9780470132449.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13244-9.
- ↑ Girolami, G. S.; Rauchfuss, T. B., Angelici, R. J. (1999). Synthesis and Technique in Inorganic Chemistry. Mill Valley, CA: University Science Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-935702-48-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ G.B. Allison, I.R. Anderson, J.C. Sheldon (1967). "The Preparation of Halogenotrimolybdate(II) Compounds". Australian Journal of Chemistry 20 (5): 869–876. doi:10.1071/CH9670869.
- ↑ Jurij V. Brencic and F. Albert Cotton (1969). ""Octachlorodimolybdate(II) Ion. Species with a Quadruple Metal-Metal Bond". Inorg. Chem. 8: 7–10. doi:10.1021/ic50071a002.