பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு

பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு (Potassium peroxochromate) என்பது K3[Cr(O2)4].என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை பொட்டாசியம் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) என்ற பெயராலும் அழைக்கிறார்கள். பாராகாந்தத் தன்மையும் செம்பழுப்பு நிறமும் கொண்ட திண்ம சேர்மமாக இது காணப்படுகிறது. +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் குரோமியம் காணப்படும் சில சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். டெட்ராபெராக்சோகுரோமேட்டு(V) இன் பொட்டாசியம் உப்பு என இவ்வுப்பை வகைப்படுத்துகிறார்கள். பெராக்சைடு ஈந்தணைவிகளால் மட்டும் நிலைப்புத்தன்மையை அடைகின்ற அணைவுச் சேர்மத்திற்கு இது உதாரணமாகும் [1]. பொட்டாசியம் குரோமேட்டையும் ஐதரசன் பெராக்சைடையும் சேர்த்து 0 º செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.

பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு
இனங்காட்டிகள்
12331-76-9 Y
பண்புகள்
K
3
CrO
8
வாய்ப்பாட்டு எடை 297.286
தோற்றம் செம்பழுப்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
2 CrO2−
4
+ 8 H
2
O
2
→ 2 [Cr(O
2
)
4
]2−
+ 8 H
2
O

இடைநிலை விளைபொருளாக உருவாகும் டெட்ராபெராக்சோகுரோமேட்டு(VI) சேர்மமானது ஐதரசன் பெராக்சைடால் ஒடுக்கப்பட்டு பொட்டாசியம் பெராக்சோகுரோமேட்டு உருவாகிறது :[2][3]

2 [Cr(O
2
)
4
]2−
+ 2 OH
+ H
2
O
2
→ 2 [Cr(O
2
)
4
]3−
+ 2 H
2
O
+ O
2

இவ்வாறாக உருவாகும் ஒட்டுமொத்த வினையை பின்வரும் சமன்பாடாக எழுதலாம்.

2 CrO2−
4
+ 9 H
2
O
2
+ 2 OH
→ 2 [Cr(O
2
)
4
]3−
+ 10 H
2
O
+ O
2

உயர் வெப்பநிலைகளில் இச்சேர்மம் தன்னிச்சையாக சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sergienko, V. S. (2007). "Structural chemistry of peroxo compounds of group VI transition metals: I. Peroxo complexes of chromium". Crystallography Reports 52 (4): 639–646. doi:10.1134/S1063774507040116. Bibcode: 2007CryRp..52..639S. 
  2. Haxhillazi, Gentiana. "Preparation, Structure and Vibrational Spectroscopy of Tetraperoxo Complexes of CrV+, VV+, NbV+ and TaV+". Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2018-07-10.
  3. Riesenfeld, E. H.; Wohlers, H.E.; Kutsch, W.A. (1905). "Höhere Oxydationsproducte des Chroms". Chemische Berichte der Deutschen Chemischen Gesellschaft 38: 1885–1898. doi:10.1002/cber.190503802113.