பொட்டாசியம் குரோமேட்டு
பொட்டாசியம் குரோமேட்டு (Potassium chromate) (K2CrO4) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்த மஞ்சள் நிறத்திண்மம் குரோமேட்டு அயனியின் பொட்டாசிய உப்பு ஆகும். இது ஆய்வகத்தில் பொதுவாகப் பயன்படும் வேதிப்பொருளாக உள்ளது. சோடியம் குரோமேட்டானது தொழில் துறையில் மிகவும் முக்கியமான ஒரு உப்பாகும் இது ஆறு இணைதிறன் கொண்ட குரோமியத்தைக் கொண்டுள்ளதால், பிரிவு இரண்டின் கீழ்வரும் புற்றுநோய்க் காரணியாகவும் உள்ளது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் குரோமேட்டு
| |
வேறு பெயர்கள்
குரோமிக் அமிலம், (K2CrO4), டைபொட்டாசியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
7789-00-6 | |
ChEBI | CHEBI:75249 |
ChemSpider | 22999 |
EC number | 232-140-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24597 |
வே.ந.வி.ப எண் | GB2940000 |
| |
பண்புகள் | |
CrK2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 194.19 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத்துாள் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.7320 கி/செமீ3 |
உருகுநிலை | 968 °C (1,774 °F; 1,241 K) |
கொதிநிலை | 1,000 °C (1,830 °F; 1,270 K) |
62.9 கி/100 மிலி (20°செ) 75.1 கி/100 மிலி (80 °செ) 79.2 கி/100 மிலி (100 °செ) | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரைவதில்லை |
−3.9·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.74 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Chemical Safety Data |
ஈயூ வகைப்பாடு | வகைப்பாடு.2 Muta. Cat. 2 நச்சுத்தன்மையுடையது (T) அரிப்பினை ஏற்படுத்தும் (Xi) சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது (N) |
R-சொற்றொடர்கள் | R49, R46, R36/37/38, R43, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் டைகுரோமேட்டு பொட்டாசியம் மாலிப்டேட்டு பொட்டாசியம் டங்சுடேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் குரோமேட்டு கால்சியம் குரோமேட்டு பேரியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைப்பு
தொகுஇதன் இரண்டு வகையான படிக வடிவங்கள் அறியப்படுகின்றன. அவையிரண்டுமே தொடர்புடைய பொட்டாசியம் சல்பேட்டு வடிவங்களை மிகவும் ஒத்துப்போகின்றன. செஞ்சாய்சதுர β-K2CrO4 வடிவமே பொதுவான வடிவமாகும். எனினும் 66 °செ வெப்பநிலைக்கு மேல், இது α-வடிவமாக மாற்றமடைகிறது.[2] சல்பேட்டு சேர்மங்கள் நான்முகி வடிவ அமைப்பைக் கொண்டிருப்பினும், குரோமேட்டு சேர்மங்களின் அமைப்பு மிகவும் சிக்கலானவையாக உள்ளது.[3]
-
β-K2CrO4 இன் அமைப்பு.
-
இரண்டு வகை K+ இட அமைப்பில் ஒன்றின் அணைவுக்கோளம் .
-
β-K2CrO4 இல் நான்முகி CrO42− மையத்தின் சூழல்
தயாரிப்பும் வினைகளும்
தொகுபொட்டாசியம் டைகுரோமேட்டுடன் பொட்டாசியம் ஐதராக்சைடை வினைப்படுத்துவதால் பொட்டாசியம் குரோமேட்டு தயாரிக்கப்படுகிறது..
கரைசலாக இருக்கும்போது, பொட்டாசியம் மற்றும் சோடியம் டைகுரோமேட்டுகளின் பண்புகள் ஒரே மாதிரியாக உள்ளன. காரீய (II) நைட்ரேட்டுடன் வினைப்படுத்தும் போது இது ஆரஞ்சு மஞ்சள் நிற காரீய (II) குரோமேட்டு வீழ்படிவினைத் தருகிறது.
பயன்பாடுகள்
தொகு- குறைந்த விலை சோடியம் உப்பு போலல்லாமல், பொட்டாசியம் உப்பானது, நீரற்ற உப்பு தேவைப்படும் சூழ்நிலைகளில் ஆய்வக பயன்பாட்டிற்காக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
- கரிமத்தொகுப்பு முறைகளில் இது ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.
- இது கனிம உப்புக்களைக் கண்டறியும் பண்பறி பகுப்பாய்வில் பயன்படுகிறது.
உதாரணமாக வெள்ளி அயனியைக் கண்டறிவதற்கான நிற அளவைச் சோதனையில் பயன்படுகிறது. பொட்டாசியம் குரோமேட்டானது அதிகப்படியான வெள்ளி அயனிகள் இருக்கும் நிலையில் சிவப்பு நிறமாக மாற்றமடைவதால், வெள்ளி நைட்ரேட்டு மற்றும் சோடியம் குளோரைடு இவற்றுக்கிடையேயான வீழ்படிவாக்குதல் தரம்பார்த்தலில் ஒரு இறுதிநிலை காட்டியாகப் பயன்படுகிறது. (இவை ஒன்றுக்கொன்று திட்டக்கரைசலாகவும் எதிர் தரம்பார்த்தல் கரைசலாகவும் பயன்படுத்தப்படலாம்)
பாதுகாப்பு
தொகுபொட்டாசியம் குரோமேட்டு ஒரு புற்றுநோய் காரணியாகவும் மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Potassium chromate information URL last accessed 15 March 2007
- ↑ 2.0 2.1 Gerd Anger, Jost Halstenberg, Klaus Hochgeschwender, Christoph Scherhag, Ulrich Korallus, Herbert Knopf, Peter Schmidt, Manfred Ohlinger, "Chromium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_067
- ↑ Gaultier, M.; Pannetier, G. "Structure cristalline de la forme 'basse temperature' du sulfate de potassium K2SO4-beta" (Crystal structure of the "low temperature" β-form of potassium sulfate) Bulletin de la Societe Chimique de France 1968, vol. 1, pp. 105-12.