பொதியில் முனிவன்
பொதியில் முனிவன் என்னும் தொடர் அகத்தியனைக் குறிக்கும். ஆய் நாட்டுப் பொதியமலை சங்கநூல்களில் பெரிதுபடுத்திப் பேசப்பட்ட மலைகளில் ஒன்று. சங்ககாலக் கணியர் விண்மீன்களில் ஒன்றுக்கு ‘அகத்தியன்’ எனப் பெயரிட்டு வழங்கிவந்தனர்.[1] தமிழர் வானியல் இந்த விண்மீன் இடம் பெயர்ந்த்தைக் குறிப்பிடுகிறது. நல்லந்துவனார் என்னும் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதியில் என்பது பொதியமலையைம், ஊர்ப் பொதுச் சாவடியையும் குறிக்கும்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ பரிபாடல் 11-11