பொதுச் சிறு பொதி அலைச் சேவை

General packet radio service (GPRS) என்பது பேக்கெட் (packet) தொழில்நுட்பம் சார்ந்த மொபைல் தரவுபரிமாற்றச் சேவையாகும், 2ஜி செல்லுலர் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முறையான குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷனிலும் (ஜிஎஸ்எம்) மற்றும் 3ஜி தொழில்நுட்ப முறையிலும் இருக்கும் பயனர்கள் இந்த GPRS வசதியைப் பெறமுடியும். 2ஜி சிஸ்டங்களில், GPRS நுட்பமானது 56-114 kbps வேகத்தில் தரவு பரிமாற்றத்தை அளிக்கிறது.[1]

GPRS நுட்பத்தில் தரவு பரிமாற்றமானது, பரிமாறப்பட்ட ஒரு மெகாபைட்டின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது, ஆனால் பழைய சர்க்யூட் ஸ்விட்சிங் (circuit switching) நுட்பத்தில் தரவு பரிமாற்றமானது, இணைப்பு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு ஏற்ப நிமிடத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இந்த நுட்பமானது, தரவு பரிமாற்றத்தைப் பயனர் பயன்படுத்துகிறாரா அல்லது அது பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்பதைச் சார்ந்து இருக்காது. GPRS நுட்பமானது, சர்க்யூட் சுவிட்சிங் சேவையோடு ஒப்பிடும் போது ஒரு சிறந்த பேக்கெட் சுவிட்சிங் சேவையாகும், ஆனால் மொபைல் வசதி அல்லாத பயனர் இணைப்பைப் பொறுத்தவரை சர்க்கியூட் சுவிட்சிங் சேவை ஒரு சிறந்த சேவைத்தரத்தை வழங்குகிறது.

GPRS வசதியோடு கூடிய 2ஜி செல்லுலர் சிஸ்டங்கள் பொதுவாக 2.5ஜி என்று அழைக்கப்படுகின்றன, அதாவது மொபைல் தொலைபேசி[2] சேவையில் 2ஜி தொழில்நுட்பத்திற்கும், 3ஜி தொழில்நுட்பத்திற்கும் இடைப்பட்ட ஒரு தொழில்நுட்பம். இது பயன்படுத்தப்படாத டைம் டிவிஷன் மல்டிபிள் அக்சஸ் (time division multiple access - TDMA) சேனல்களில், மிதமான வேகத்தில் தரவு பரிமாற்றத்தை அளிக்கிறது, எடுத்துக்காட்டாக ஜிஎஸ்எம் சிஸ்டங்களில். உண்மையில், பிற தரமுறைகளுக்கு இணையான தரத்தை எட்டுவதற்காக GPRS நுட்பத்தை விரிவாக்குவதற்கான சிந்தனைகளும் இருக்கின்றன, ஆனால் அந்த வலையமைப்புகள் புதிய ஜிஎஸ்எம் தரமுறைகளுக்கு மாற்றப்பட்டாக வேண்டும், பிறகு இதனால் GPRS பயன்படுத்தும் ஒரே வலையமைப்பு ஜிஎஸ்எம் என்பதாக மட்டும் மாறியிருக்கும். ஜிஎஸ்எம் வெளியீடு 97 மற்றும் அதற்கு பிந்தைய புதிய வெளியீடுகளில் GPRS இடம் பெற்றது. இது ஐரோப்பிய தரமுறைகளுக்கான தொலைத்தொடர்பு பயிலகத்தால் (European Telecommunications Standards Institute-ETSI) தரமுறைப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது இது மூன்றாம் தலைமுறை பார்ட்னர்ஷிப் புரோஜெட்டினால் (3rd Generation Partnership Project-3GPP)[3][4] தரமுறைப்படுத்தப்படுகிறது.

முந்தைய CDPD மற்றும் i-mode பேக்கெட் சுவிட்ச்டு செல்லுலர் தொழில்நுட்பங்களுக்கு ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தின் பதிலீடாக GPRS உருவாக்கப்பட்டது.

தொழில்நுட்ப உட்பார்வை

தொகு

வழங்கப்படும் சேவைகள்

தொகு

GPRS நுட்பமானது ஜிஎஸ்எம் சர்க்யூட் சுவிட்ச்டு டேட்டா திறன்களை விரிவாக்கி, பின்வரும் சேவைகளைச் சாத்தியப்படுத்துகிறது:

  • "எப்போதும்" இணையத்தைப் பயன்படுத்தும் வசதி
  • மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS)
  • செல்லுலர் மூலமாக புஷ் டூ டாக் வசதி (PoC/PTT)
  • இன்ஸ்டன்ட் மெசேஜிங் மற்றும் வயர்லெஸ் கிராமங்களின் உருவாக்கம்
  • வயர்லெஸ் அப்ளிகேஷன் நெறிமுறை (WAP) மூலமாக மென் உபகரணங்களுக்கான (smart devices) இணைய பயன்பாடு
  • பாயிண்ட்-டூ-பாயிண்ட் (P2P) சேவை: இணையத்துடன் உள்-வலையமைப்பு (inter-networking) செய்யும் வசதி

GPRS வழியாக குறுந்தகவல்கள் (SMS) பயன்படுத்தப்பட்டால், குறுந்தகவல் அனுப்பும் வேகம் சுமார் நிமிடத்திற்கு 30 குறுந்தகவல்கள் என்ற அளவை எட்ட முடியும். இது ஜிஎஸ்எம் சிஸ்டத்தில் சாதாரணமாக குறுந்தகவல்கள் அனுப்பும் வேகத்தை விட அதிக வேகமாகும், ஜிஎஸ்எம் சிஸ்டத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வேகம் நிமிடத்திற்கு 6 முதல் 10 வரையில் மட்டுமாகும்.

பொருத்தமான நெறிமுறைகள்

தொகு

GPRS பின்வரும் நெறிமுறைகளுக்குப் பொருந்துகிறது:

  • இணைய நெறிமுறை (IP). நடைமுறையில், மொபைல்களில் இருக்கும் உலாவிகள், இன்னும் IPv6 வகை பிரபலமாகாததால், இணைய நெறிமுறைப் பதிப்பு 4 வகையினதையே பயன்படுத்துகின்றன.
  • பாயிண்ட்-டூ-பாயிண்ட் நெறிமுறை (PPP). இந்த முறையில் பொதுவாக மொபைல் சேவை வழங்குனர் பொதுவாக PPP முறை சேவையை வழங்குவதில்லை, ஆனால் இணைக்கப்பட்ட கணிணியுடன் செல்பேசி ஒரு மோடமாக பயன்படுத்தப்பட்டால், செல்பேசி வழியாக இணைய புரோட்டோக்கால் சேவையைப் பெற PPP முறையைப் பயன்படுத்தலாம். இது செல்பேசி சாதனத்திற்கு தானாகவே ஒரு IP முகவரியை அளிப்பதற்கும் அனுமதிக்கிறது.
  • X.25 இணைப்புகள். இது தரமுறையில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் கூட, வயர்லெஸ் பேமெண்ட் உபகரணங்கள் போன்ற பயன்பாடுகளுக்காக சிறியளவில் பயன்படுத்தப்படுகின்றன. X.25 இணைப்புகள் இப்போதும் PPP-ஆல், அல்லது IP மீதிலும் கூட, ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, ஆனால் பயன்பாட்டு சாதனத்தில் (எடுத்துக்காட்டாக, பயனர் உபகரணங்கள்) அமைக்கப்பட்டிருக்கும் வசதிகளை அல்லது உள்ளடக்க திறன்களை முழுவதுமாக பயன்படுத்த, இவ்வாறு செய்வதற்கு வலையமைப்பு அடிப்படையிலான ரௌட்டர் தேவைப்படுகிறது.

TCP/IP பயன்படுத்தப்படும் போது, ஒவ்வொரு செல்பேசியிலும் ஒன்றோ அல்லது அதற்குமேலான ஐபி முகவரிகளையும் ஒதுக்கி அளிக்க முடியும். GPRS நுட்பமானது, செல் ஹேண்ட்ஓவர்களின் (ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லிற்கு நகருதல்) போது செல்பேசிக்கு ஐபி பேக்கெட்களை அனுப்பவும், அவற்றை சேமிக்கவும் செய்யும். TCP எவ்வகையான பேக்கெட் இழப்பையும் (எடுத்துக்காட்டாக, ஒரு ரேடியோ அலைவரிசை இரைச்சலால் ஏற்படும் குறுக்கீடு) கையாள்கிறது, இதனால் டிரான்ஸ்மிஷன் வேகத்தில் தற்காலிகமாக ஒரு திணறல் ஏற்படக்கூடும்.

வன்பொருள்

தொகு

GPRS நுட்பத்திற்கு பொருத்தமான உபகரணங்கள் முன்று பிரிவுகளில் பிரிக்கப்படுகின்றன:

கிளாஸ் எ
இதை GPRS சேவை மற்றும் ஜிஎஸ்எம் சேவை (பேச்சுக்கும், குறுந்தகவலுக்கும்) இரண்டும் ஒரே நேரத்திலும் பயன்படுத்தலாம். இதுபோன்ற சாதனங்கள் தான் இன்று பெருமளவில் இருக்கின்றன.
கிளாஸ் பி
இவற்றை GPRS சேவை மற்றும் ஜிஎஸ்எம் சேவை இரண்டிலும் (பேச்சுக்கும், குறுந்தகவலுக்கும்) இணைக்கலாம், ஆனால் ஒரு நேரத்தில் ஏதாவது ஒன்றை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஜிஎஸ்எம் சேவையின் (அழைப்பு அல்லது குறுந்தகவல்) போது, GPRS சேவை நிறுத்தப்படும், ஜிஎஸ்எம் சேவை (அழைப்பு அல்லது குறுந்தகவல்) முடிவடைந்த பிறகு தானாகவே அது மீண்டும் இணைக்கப்படும். பெரும்பாலான GPRS செல்பேசிகள் கிளாஸ் பி வகையைச் சேர்ந்தவையாகும்.
கிளாஸ் சி
இந்த வகை உபகரணங்கள் GPRS சேவையிலோ அல்லது ஜிஎஸ்எம் சேவையிலோ (அழைப்பு அல்லது குறுந்தகவல்) ஏதாவதொன்றில் மட்டுமே இணைக்கப்படும். ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு நாமாகவே மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில் தரவு பரிமாற்றம் செய்வதற்கு சிறந்த கிளாஸ் எ வகை உபகரணங்கள் தேவைப்படுகின்றன, அதாவது இரண்டு ரேடியோக்கள் தேவைப்படுகின்றன. இந்த விலையுயர்ந்த தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு GPRS செல்பேசியில் டுயூல் டிரான்ஸ்பர் மோட் (DTM) வசதி இருக்க வேண்டும். ஒரேசமயத்தில் இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில் டிரான்ஸ்மிட் செய்ய வேண்டிய தேவையில்லை என்ற நிலையை உறுதிப்படுத்தும் வலையமைப்புகளுடன், DTM வசதி கொண்ட ஒரு செல்பேசி ஒரேசமயத்தில் அழைப்பு மற்றும் பேக்கெட் தரவு இரண்டையும் கையாளக் கூடும். இதுபோன்ற செல்பேசிகள் சூடோ-கிளாஸ் எ என்று அழைக்கப்படுகின்றன, சில சமயங்களில் இவை "சாதாரண கிளாஸ் எ" என்றும் அழைக்கப்படுகின்றன. சில வலையமைப்புகள் 2007-ல் DTM-க்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஹூவாய் E220 மோடம்

USB GPRS மோடம்கள் ஒரு டெர்மினல் போன்ற இடைமுக USB 2.0 மற்றும் அதற்கு பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும், இவை டேட்டா பார்மெட்கள் V.42bis, மற்றும் RFC 1144 மற்றும் வெளிப்புற ஆண்டெனாக்களைப் பயன்படுத்துகின்றன. வடிவத்திலும், அளவிலும் ஒரு கம்ப்யூட்டர் மவுஸைப் போல இருக்கும் கார்டுகளாகவோ (மடிக்கணிணிகளில்) அல்லது வெளிப்புற பயன்பாட்டு USB சாதனங்களாகவோ மோடம்கள் பயன்படுத்தப்படும்.

கோடிங் முறைகள் மற்றும் வேகங்கள்

தொகு

GPRS நுட்பத்தின் பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கும் வேகங்கள் பின்வரும் பல்வேறு காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன:

  • சேவை வழங்குனரால் ஒதுக்கப்படும் BTS TDMA டைம் ஸ்லாட்டுகளின் எண்ணிக்கை
  • GPRS மல்டிஸ்லாட் கிளாஸ் என்று சொல்லப்படும் செல்பேசியின் அதிகபட்ச திறன்
  • பயன்படுத்தப்படும் சேனல் குறிமுறை பின்வரும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது.
 கோடிங் 
முறைகள்
 வேகம் 
(kbit/s)
சிஎஸ்-1 8-0
சிஎஸ்-2 12.0
சிஎஸ்-3 14.4
சிஎஸ்-4 20.0

மிகக் குறைந்தபட்ச வெளிப்பாட்டோடு (robust), ஆனால் விரைவான, கோடிங் முறை (CS-4) பேஸ் டிரான்ஸ்சீவர் ஸ்டேஷனுக்கு (BTS) அருகில் இருக்கும். செல்பேசி BTS-ல் இருந்து தூரத்தில் இருக்கும் போது அதிக வெளிப்பாடு (robust) கொண்ட கோடிங் முறையான CS-1 பயன்படுத்தப்படும்.

CS-4 பயன்படுத்தும் போது, ஒரு பயனருக்கு டைம் ஸ்லாட்டுக்கு 20 kbit/s என்ற வேகம் கிடைக்கும். ஆனால், இந்த முறையைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கிடைக்கும் செல் கவரேஜை விட 25% குறைந்துவிடும். CS-1 பயன்படுத்தும் போது, டைம் ஸ்லாட்டுக்கு 8.0 kbit/s மட்டும் தான் ஒரு பயனருக்கு கிடைக்கும், ஆனால் இதில் பொதுவான கவரேஜில் 98% எட்ட முடியும். செல்பேசி இருக்கும் இடத்திற்கு ஏற்ப, வலையமைப்பு சாதனத்தால் ஒருபோதும் தானாகவே பரிமாற்ற வேகத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

GPRS நுட்பம் மட்டுமில்லாமல், தரவு பரிமாற்ற சேவைகள் வழங்கும் மேலும் இரண்டு ஜிஎஸ்எம் தொழில்நுட்பங்களும் உள்ளன: அவையானவை, சர்க்கியூட் சுவிட்ச்டு டேட்டா (CSD) மற்றும் ஹை-ஸ்பீட் சர்க்கியூட்-சுவிட்ச்டு டேட்டா (HSCSD) ஆகியவன. GPRS நுட்பத்தின் பகிர்ந்து கொள்ளும் முறையுடன் ஒப்பிடுகையில், இவை மாறாக ஒரு பிரத்யேக சர்க்கியூட்டை பயன்படுத்துகின்றன (பொதுவாக இவற்றில் நிமிடத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும்). வீடியோ அழைப்பு போன்ற சில பயன்பாடுகள் தேவையானால் HSCSD தேர்ந்தெடுக்கப்படலாம், குறிப்பாக இரண்டு தரப்பிற்கும் இடையில் தொடர்ந்து தரவு பரிமாற்றம் இருக்குமானால் இந்த நுட்பம் தேர்ந்தெடுக்கப்படும்.

பின்வரும் அட்டவணை GPRS மற்றும் சர்க்கியூட் சுவிட்ச்டு டேட்டா சேவைகளின் சில சாத்தியமான கான்பிக்ரேஷன்களைத் தொகுத்து வழங்குகிறது.

 தொழில்நுட்பம்   பதிவிறக்கம் (kbit/s)   பதிவேற்றம் (kbit/s)   ஒதுக்கப்பட்ட TDMA டைம்ஸ்லாட்டுக்கள்  
சிஎஸ்டி (CSD) 9.6 9.6 1-1
எச்எஸ்சிஎஸ்டி (HSCSD) 28.8 14.4 2+1
எச்எஸ்சிஎஸ்டி (HSCSD) 43.2 14.4 3
GPRS 80.0 20.0 (கிளாஸ் 8 & 10 and சிஎஸ்-4) 4-1
GPRS 60.0 40.0 (கிளாஸ் 10 மற்றும் சிஎஸ்-4) [3] ^ [2]
EGPRS (எட்ஜ்) 236.8 59.2 (கிளாஸ் 8, 10 மற்றும் எம்சிஎஸ்-9) 4-1
EGPRS (எட்ஜ்) 177.6 118.4 (கிளாஸ் 10 மற்றும் எம்சிஎஸ்-9) [3] ^ [2]

மல்டிபிள் அக்சஸ் முறைகள்

தொகு

GPRS நுட்பத்தோடு கூடிய ஜிஎஸ்எம் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் மல்டிபிள் அக்சஸ் முறைகள், ப்ரீக்குவன்சி டிவிஷன் டுப்ளக்ஸ் (FDD) மற்றும் TDMA ஆகியவற்றின் அடித்தளத்தில் அமைந்திருக்கும். ஒரு பயனரின் ஓர் அழைப்பின் போது, அப்-லிங்க் மற்றும் டவுன்-லிங்க் அலைவரிசை சேனல்களின் ஒரு ஜோடி ஒதுக்கப்படும். இது டைம் டொமைன் ஸ்டேடிக்கல் மல்டிபிளக்சிங் உடன் இணைக்கப்பட்டிருக்கும்; அதாவது, பேக்கெட் மோட் கம்யூனிகேஷன், இதன்மூலம் ஒரே அலைவரிசை சேனலை பல பயனர்களோடு பகிர்ந்து கொள்ளும் சாத்தியக்கூறு உண்டாகிறது. ஒரு ஜிஎஸ்எம் டைம்ஸ்லாட்டிற்கு ஏற்ப பேக்கெட்கள் நிலையான நீளத்தைக் கொண்டிருக்கின்றன. டவுன்-லோடானது, முதலில் வந்தவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் பேக்கெட் முறையைப் பயன்படுத்துகிறது, ஆனால் அப்-லிங்கானது ரிசர்வேஷன் ALOHA (R-ALOHA)-வைப் போன்ற ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒரு கன்டன்சன் பேஸின் போது, ஒதுக்கீட்டு விசாரணைக்காக ஸ்லாட்டட் ALOHA (S-ALOHA) பயன்படுத்தப்படுகின்றது, பிறகு முதலில் வந்தவைகளுக்கு முதலில் சேவை என்ற முறையில் டைனமிக் TDMA-ஐ பயன்படுத்தி தரவு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

நுள்நுழைவு அமைத்தல்

தொகு

ஒரு GPRS இணைப்பானது, அதன் அக்சஸ் பாயிண்ட் பெயரைக் (APN) குறிப்பிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த APN ஆனது, வயர்லெஸ் அப்ளிகேஷன் நெறிமுறை (WAP) அக்சஸ், குறுந்தகவல் சேவை (SMS), மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS) மற்றும் மின்னஞ்சல் மற்றும் உலகளாவிய வலைத்தளம் போன்றவற்றை அணுகுவதற்கான இணைய தொலைத்தொடர்பு சேவைகளை வரையறுக்கிறது.

ஒரு வயர்லெஸ் மோடத்தில் ஒரு GPRS இணைப்பை அமைப்பதற்கு, ஒரு பயனரானவர் சேவை வழங்குனரால் அளிக்கப்படும் APN, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (இது கட்டாயமில்லை), மற்றும் எப்போதாவது ஐபி முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

பயன்பாட்டளவு

தொகு

2003-ல் அளிக்கப்பட்ட GPRS இணைப்பின் அதிகபட்ச வேகம், ஓர் அனலாக் வயர் தொலைத்தொடர்பு வலையமைப்பில் ஒரு மோடம் இணைப்பில் அளிக்கப்பட்ட வேகத்தில் தான் இருந்தது, அதாவது பயன்படுத்தும் தொலைபேசியைச் சார்ந்து நொடிக்கு 32 முதல் 40 கிலோபிட்களாக இருந்தது. சுழற்சி நேரம் மிகவும் உயர்வாக இருந்தது; ரவுண்ட்-ட்ரிப் டைம் (RTT) சுமார் 600-700 மில்லி நொடிகளாகவும், எப்போதாவது 1 நொடியை எட்டுவதாகவும் இருந்தது. GPRS பொதுவாக அழைப்பிற்கு அடுத்தபடியாக தான் முன்னுரிமை அளிக்கப்படும், அதனால் இணைப்பின் தரம் பெருமளவில் வேறுபடுகிறது.

மேம்படுத்தப்பட்ட லேடன்சி/RTT (உதாரணமாக, விரிவாக்கப்பட்ட அப்-லிங்க் TBF மோட் வசதி) வசதி கொண்ட சாதனங்களும் பொதுவாகக் கிடைக்கின்றன. மேலும், சில குறிப்பிட்ட சேவை வழங்குனர்களைப் பொறுத்து, வலையமைப்பு மேம்பாடுகளும் கிடைக்கின்றன. இந்த மேம்பாடுகளால், செயல்பாட்டில் இருக்கும் ரவுண்ட்-ட்ரிப் நேரம் குறைபடும், இதனால் பயன்பாட்டு மட்டத்தில் மொத்த வேகங்களும் கணிசமாக அதிகரிக்கின்றது.

மேலும் பார்க்க

தொகு
  • கோட் டிவிஷன் மல்டிபிள் அக்சஸ் (CDMA)
  • என்ஹேன்ஸ்டு டேட்டா ரேட்ஸ் இஃபார் ஜிஎஸ்எம் எவாலூசன் (EDGE)
  • யூனிவர்சல் மொபைல் டெலிபோனி சிஸ்டம் (UMTS)
  • GPRS பிரதான வலையமைப்பு (GPRS core network)
  • துணை வலையமைப்பைச் சார்ந்த கூடுகை நெறிமுறை (SNDCP)
  • ஐபி மல்டிமீடியா சப்சிஸ்டம்
  • ஹை-ஸ்பீட் டவுன்லிங்க் பேக்கெட் அக்சஸ் (HSDPA)
  • உபகரணங்களின் பேண்டுவிட்த்கள் பற்றிய பட்டியல்

குறிப்புதவிகள்

தொகு

பிற வலைத்தளங்கள்

தொகு

வார்ப்புரு:Mobile telecommunications standards