பொதுத் தகுதித் தேர்வு

பொதுத் தகுதித் தேர்வு (Common Eligibility Test அல்லது சி.இ.டி ), இந்திய அரசு, இந்திய பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய ரயில்வேயில் அரசிதழ் பதிவு பெறாத பி மற்றும் சி பிரிவு பதவிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வு இந்திய அரசின் முகமையான [[தேசிய பணியாளர் தேர்வு முகமையால் நடத்தப்படும். [1] பல நுழைவுத் தேர்வு நடத்தும் முறையினை ஒரே தேர்வாக மாற்றுவதற்காக தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் என்பதற்கு ஆகஸ்ட் 19 , 2020 அன்று இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இத்தகுதித் தேர்வு எழுதுவதற்கு தேவையான கல்வித் தகுதிகள் பட்டப்படிப்பு, உயர்நிலை (12 வது தேர்ச்சி) மற்றும் இடைநிலை (10-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்துகிறது. இதற்கு முன்பாக இத்தேர்வுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர்கள் தேர்வு வாரியம், இரயில்வே தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்டது.

தேர்வு மையங்கள் தொகு

தேர்வர்களின் வசதிக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். மொத்தம் சுமார் 1000 தேர்வு மையங்கள் செய்யப்படும். [2]

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Union Cabinet approves setting up of National Recruitment Agency". Mumbai: Press Information Bureau. August 19, 2020. https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1647000. பார்த்த நாள்: August 19, 2020. 
  2. "Common Eligibility Test: Key things to know about NRA CET". New Delhi: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. August 20, 2020. https://timesofindia.indiatimes.com/home/education/news/common-eligibility-test-key-things-to-know-about-nra-cet/articleshow/77653326.cms. பார்த்த நாள்: August 21, 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுத்_தகுதித்_தேர்வு&oldid=3441501" இலிருந்து மீள்விக்கப்பட்டது