தேசிய பணியாளர் தேர்வு முகமை

தேசியப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency)[2]இந்திய நடுவண் அரசால் 19 ஆகஸ்டு 2020 அன்று நிறுவப்பட்டது.

தேசியப் பணியாளர் தேர்வு முகமை
சுருக்கம்NRA
உருவாக்கம்19 ஆகத்து 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-08-19)
வகைகுடிமைப் பணிகள் மற்றும் இராணுவப் பணிகள் தேர்வு முகமை
  • பிரிவு பி
  • பிரிவு C
  • பிரிவு D


அரசுடமை வங்கிப் பணிகளுக்கு தேர்வு முகமையின் பூர்வாங்கத் (Preliminary) தேர்வு மட்டும்)[1]

  • புரபேசனரி அதிகாரி (Probationary Officer)
  • சிறப்பு அதிகாரி
  • எழுத்தர்
  • ஏவலர்/பாதுகாவலர்
தலைமையகம்புது தில்லி, இந்தியா
சேவை பகுதி
இந்தியா

இந்திய அரசின் குடிமைப் பணிகள், பொதுத்துறை நிறுவனப் பணிகள், இராணுவப் பணிகள், இரயில்வே பணிகள் மற்றும் அரசுடமை வங்கிகளின் தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவு சி மற்றும் டி பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகமையானது பொதுத் தகுதித் தேர்வுகளை (Common Eligibility Test) இணையதளம் மூலம் ஆண்டிற்கு இரு முறை நடத்துகிறது.[3][4] [5] [6]இந்திய இரயில்வே அமைச்சகம், அரசுடமை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பொதுத்துறை நிறுவனப் பணிகள் மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்[7]ஆகிய அமைப்புகளின் சார்பாக தேசிய பணியாளர் தேர்வு முகமை செயல்படுகிறது.

பின்னணி தொகு

முன்னர் இந்திய அரசின் குடிமைப் பணிகள், பொதுத்துறை நிறுவனப் பணிகள், இராணுவப் பணிகள், இரயில்வே பணிகள் மற்றும் அரசுடமை வங்கிகளின் தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவு சி மற்றும் டி பணியாளர்களை தேர்வு செய்ய தனித்தனி தேர்வு வாரியங்கள் ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தியது. இந்த பல ஆட்சேர்ப்பு தேர்வுகள் எழுதுவோர்கள் கட்டணம் செலுத்துதல் மற்றும் தேர்வு மையகளுக்குச் செல்ல நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருத்தல் போன்றவகள் தேர்வு எழுதுவோருக்கு பெரும் சுமையாக இருந்தது.[8]

எனவே இத்தகைய பெரும் சுமைகளை தேர்வு எழுதுவோர்களுக்கு எளிதாக்கும் பொருட்டு, ஒரே குடையின் கீழ் அனைத்து பணியாளர் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேசிய பணியாளர் தேர்வு முகமை திட்டமானது 1 பிப்ரவரி 2021 அன்று 2020-21 வரவு-செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[9]இந்திய அரசின் பல துறைகளின் பணியிடங்களை நிரப்பும் இத்திட்டத்திற்கு 19 ஆகஸ்டு 2020 அன்று இந்திய நடுவண் அரசின் அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது.[8]

பொதுத் தகுதித் தேர்வுகளுக்கான தகுதிகள் (Common Eligibility Test (CET) தொகு

தொகுதி சி மற்றும் டி பணியாளர்களை ஆட்சேர்ப்பதற்கு இந்திய அரசின் பல துறைகள் பலவிதமாக தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக அப்பணிகளை பொதுத் தகுதித் தேர்வு செய்கிறது. இத்தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதிகள் பத்தாம் வகுப்பு, +2 அல்லது பட்டப்படிப்பு ஆகும். பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகள் வரை தகுதி பெறும்.[9]

தேர்வு எழுதும் மொழிகள் தொகு

இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியலில் உள்ளவற்றில் 12 மொழிகள் மற்றும் ஆங்கிலம் மொழி ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் பொதுத் தகுதித் தேர்வினை எழுதலாம்.[10]

எத்தனை முறை எழுதலாம் தொகு

குறிப்பிட்ட வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானுலாலும் தேர்வுகள் எழுதலாம்.[9]

தேர்வு நடைபெறுமிடம் தொகு

தேர்வு எழுதுவோர் அவர்கள் குறிப்பிடும் மாவட்டத்தின் தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம்.[9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Anulekha Ray (19 August 2020). "National Recruitment Agency gets Cabinet's nod. Common Eligibility Test for govt jobs, PSBs". Livemint. https://www.livemint.com/news/india/cabinet-approves-national-recruitment-agency-key-points-11597831561356.html. பார்த்த நாள்: 19 August 2020. 
  2. "Union Cabinet approves setting up of National Recruitment Agency". Mumbai: Press Information Bureau. August 19, 2020. https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1647000. பார்த்த நாள்: August 19, 2020. 
  3. Common Eligibility Test
  4. Harikishan Sharma (August 19, 2020). "Explained: How National Recruitment Agency will streamline recruitment process". https://indianexpress.com/article/explained/national-recruitment-agency-nra-government-jobs-6561491/. பார்த்த நாள்: August 19, 2020. 
  5. National Recruitment Agency to start conducting online test for govt jobs from September 2021
  6. Anulekha Ray (19 August 2020). "National Recruitment Agency gets Cabinet's nod. Common Eligibility Test for govt jobs, PSBs". Livemint. https://www.livemint.com/news/india/cabinet-approves-national-recruitment-agency-key-points-11597831561356.html. பார்த்த நாள்: 19 August 2020. 
  7. Railway Recruitment Control Board
  8. 8.0 8.1 "National Recruitment Agency: All you need to know about NRA and CET for Group B, Group C jobs". Financial Express. 19 August 2020. https://www.financialexpress.com/jobs/national-recruitment-agency-all-you-need-to-know-about-nra-and-cet-for-group-b-group-c-jobs/2060013/. 
  9. 9.0 9.1 9.2 9.3 "National agency to hold common eligibility test for govt job". Times of India. 20 August 2020. https://timesofindia.indiatimes.com/home/education/national-agency-to-hold-common-eligibility-test-for-govt-jobs/articleshow/77631129.cms. 
  10. Explained: How the National Recruitment Agency will streamline the recruitment process