பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 1971
முதலாவது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு (First Commonwealth Heads of Government Meeting) சிங்கப்பூரில் 1971 ஆம் ஆண்டு சனவரி 14 தொடக்கம் சனவரி 22 வரை இடம்பெற்றது. இம்மாநாட்டிற்கு அந்நாட்டின் பிரதமரும், அரசுத் தலைவருமான லீ குவான் யூ தலைமை வகித்தார்.
1வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு | |
---|---|
இடம்பெற்ற நாடு | சிங்கப்பூர் |
தேதிகள் | 14 சனவரி 1971– 22 சனவரி 1971 |
பின்னையது | 1973 |
தென்னாப்பிரிக்காவுக்கு பிரித்தானியா ஆயுதங்கள் விற்பனை செய்வதாக எழுப்பப்பட்ட சர்ச்சைகளை அடுத்து எலிசபெத் மகாராணியை இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என அன்றைய பிரித்தானியப் பிரதமர் எட்வர்ட் ஹீத் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் கலந்து கொள்ளவில்லை. இதுவே 2013 ஆம் ஆண்டு வரை மகாராணி கலந்து கொள்ளாத ஒரேயொரு பொதுநலவாய உச்சிமாநாடு ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Concern as the Queen misses Commonwealth summit in Sri Lanka". த டெலிகிராப். 7 மே 2013 இம் மூலத்தில் இருந்து 2013-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130609134156/http://www.telegraph.co.uk/news/uknews/queen-elizabeth-II/10041931/Queens-absence-from-Commonwealth-meeting-sign-of-changing-role.html. பார்த்த நாள்: 7 மே 2013.