பொதுமை இணைமுரணியல்

பொதுமை இணைமுரணியல் (Universal dialectic)என்பது தாவோயிச, புதுக்கன்பூசிய தைஜி அல்லது " மீ அறுதிமை" கருத்துடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு நிலவலியல் கருத்துப் படிமம் ஆகும். மேற்கு நாடுகளில், எகல் உட்பட்ட இணைமுரணியல் வல்லுநர்கள் சிலர், குறிப்பிடத்தக்க வகையில் ஒத்ததாகக் கருதும் எதிர்நிலைப் பொருண்மைகளை ஆராய்ந்து, அவற்றைத் தொகுத்து ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தனர். பொதுமை இணைமுரணியல் என்பது எராக்ளிட்டசின் வரையறைப்படி, உள்ளார்ந்த நிரப்புத்தன்மைகளின் ஒற்றை அடிப்படை ஆக்க(படைப்பு) நெறிமுறையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சுழற்சி என்பது கிரேக்க பார்வையைப் போல மாற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தாமல், வளர்ச்சியையும் உட்செரிப்பதால் இது இயல்பாகவே முற்போக்கானது, இது ஒரு இணைமுரணியல் தொகுப்புச் செயல்முறையின் ஊடாக சிக்கலான உயர்நிலையைக் கொண்டுவருகிறது.

பொதுமை இணைமுரணியல் - தைஜி(சீனம்)

அதன்படி, "பொதுமை இணைமுரணியல்" என்ற சொல், சீன வடிவத் தைஜியின் கருத்தாக்கத்தை மேற்கத்தியமயமாக்கும் மற்றும்/அல்லது நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் காணலாம், இது உருவாக்கத்தின் தற்போதைய தன்-ஒழுங்கமைத்தல் செயல்பாட்டில் நிரப்பு எதிர்நிலைகளின் அடிப்படை பங்கும் தன்மையும் பற்றியது. இது சாக்ரட்டீசு, எகல், மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட இணைமுரணியல் கருத்துடன் கிழக்கத்திய மர்புப் பார்வையை இணைக்கிறது. இதில் மேற்கத்திய செல்வாக்கு நிகழ்வுக்கு(செயல்முறைக்கு), மாற்றம் எனும் தவிர்க்க முடியாத ஒரு முற்போக்கான உட்கூற்றைச் சேர்க்கிறது, இது கிழக்கத்திய சிந்தனையில் இல்லாத கருத்துப்படிமம் ஆகும்.

தற்சார்பு, சமமை, சம்ப் பிறப்புணர்வு(சகோதரத்துவம்) ஆகிய மூன்று நிலைகளில் சார்த்தரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் பயன்படுத்திய கட்டமைப்பைக் கருதும்போது, ஜீன்-பால் சார்த்தரும் இந்தத் திசையில் தனது சிந்தனையை வளர்த்ததாகக் கருதலாம். சார்த்தரின் எழுத்து இயல்பாகவே இணைமுரணியல் சார்ந்ததாக இருந்தது ஆனால் பொதுமை நோக்கில் படிமலர்வதாக இருந்தது.


மேலும் பார்க்கவும் தொகு

  • இணைமுரணியல ஒருமை வாதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுமை_இணைமுரணியல்&oldid=3845250" இலிருந்து மீள்விக்கப்பட்டது