பொன்னணியாறு அணை
பொன்னணியாறு அணை (Ponnaniyaru dam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் திருச்சியிலிருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணப்பாறையின் அருகே 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1]கடவூர் தாலுகாவில் பூஞ்சோலை என்னும் ஊரின் வனப்பகுதியில் உள்ள செம்மலை, பெருமாள் மலைகளுக்கு இடையில், தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கைத் தடுக்க 1975-ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 313 ஏக்கர் பரபபளவில் அமைந்துள்ள அணையின் உயரம் 51அடிகள் ஆகும்.[2][3]இங்கிருந்து குடமுருட்டி ஆறாக மாறி காவேரியில் கலக்கிறது. அணையின் மூலம் வைய்யம்பட்டி ஒன்றியத்தில் 1820 ஏக்கர் நிலம் உட்பட கிட்டத்தட்ட 3,500 எண்னிக்கைக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு இந்த அணையின் நீர் பயன் தருகிறது. கூடவே பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும் இந்த அணையின் நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. அணையின் கிழக்கு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு ஒரு சுற்றுலா தலமாகவும் செயல்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருச்சி ஊர்ப்பெருமை: பொழுதுபோக பொன்னணியாறு அணை... ஆனால், இந்தப் பிரச்னையை அரசு கவனிக்குமா?". ஆனந்த விகடன். https://www.vikatan.com/lifestyle/travel/trichy-tourism-ponnaniyaru-dam-is-a-beautiful-place-to-spend-your-leisure-time. பார்த்த நாள்: 9 September 2022.
- ↑ "மணப்பாறை பொன்னணியாற்றின் நீர்மட்டம் 29 அடியாக உயர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/sep/28/manapparai-ponnaniyaru-dam-reached-a-height-of-29-feet-3707961.html. பார்த்த நாள்: 9 September 2022.
- ↑ http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/ponnaniyaru-dam-in-tiruchi-remains-a-neglected-monument/article5374830.ece
- ↑ "பொன்னனியாறு அணை". தமிழ்நாடு அரசு. https://karur.nic.in/ta/tourist-place/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/. பார்த்த நாள்: 9 September 2022.