பொன்மேரி சிவன் கோயில்
பொன்மேரி சிவன் கோவில் (Ponmeri Shiva Temple) என்பது இந்திய மாநிலமான, கேரள மாநிலத்தில், கோழிக்கோட்டின், வடகரையில் உள்ள ஒரு பிரபலமான சிவன் கோயிலாகும். கோயில்களில் அரிதாக வழிபடப்படும் பிரம்மனுக்கு அமைக்கபட்டுள்ள தனித்துவமான துணை கோயிலும் இருப்பதால் இந்த கோயில் பிரபலமானது.
வரலாறு மற்றும் தொன்மக்கதை
தொகுகி.பி பதினொன்றாம் நூற்றாண்டில், கடத்தநாடு மன்னன் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான பெருந்தச்சனைக் கொண்டு இந்த மாபெரும், அற்புதமான மகாதேவர் கோயிலைக் கட்ட ஆணையிட்டர். கோயிலின் கருவறை-தனித்துவமானது மேலும் தங்கத்தால் பூசப்பட்ட கப்பூவுடன் (கவசம்) கொண்ட பிரம்மாண்டமான சிவலிங்கத்தைக் கொண்டது. கோயில் பற்றிய தொன்மக்கதை என்னவென்றால், ஆட்சியாளருக்கும் கட்டிடக் கலைஞருக்கும் இடையில் ஏறபட்ட சண்டை காரணமாக, கட்டிடக் கலைஞர் கோயில் பணியை முழுமையாக்காமல் விட்டுவிடுகிறார். எனவே கோவில் பணிகள் முழுமையாகாமல் இருக்கிறது. "பொன்மேரியில் செய்த வேலை போல முழுமையற்றது" என மலையாளத்தில் ஒரு பழமொழி உள்ளது. இன்றும் கோயிலின் வெளிப்புற கட்டிடப் பகுதியில் பல்வேறு கலை அம்சங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று, கோயில் மறுசீரமைப்பையும், வளர்ச்சிப் பணிகளில் சேத்ர சம்ரகசண சமிதி முதன்மைப் பங்கு வகிக்கிறது.
தெய்வங்கள்
தொகுகோயிலின் தனித்தன்மை ' மும்மூர்த்தி 'களான - பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியோராவர் உள்ளது ஆகும். முதன்மைத் தெய்வமான சிவனைத் தவிர கூடுதலாக விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், பார்வதி, மாலொருபாகன், சூரியபகவான், பூத்தேவர், ஐயப்பன், முருகன், கிருஷ்ணன் போன்ற தெய்வத் திருமேனிகள் கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன. பொன்மேரி சிவபெருமானை அன்பாக 'தியண்ணூர் அப்பன்' என்று அழைக்கிறார்கள். அருகிலுள்ள கரட் என்னும் ஊரில் ஒரு கிருஷ்ணர் கோயிலும் உள்ளது.