பொன்விழா பூங்கா, ஜாம்சேத்பூர்

பொன்விழா பூங்கா என்பது இந்தியாவின் ஜாம்சேத்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும்.[1] வெளிப்புற சுற்றுலா, வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளை அனுபவிக்க விரும்பும் அனைவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாளை மகிழ்சியாகக் கழிக்க இது பிரபலமான இடமாகும்.[2] மெல்லோட்டப் பிரியர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மத்தியில் பிரபலமான இந்த பூங்காவில் பொழுதுபோக்கு மையம், நீரூற்றுகள் மற்றும் ஒரு மிருகக்காட்சிசாலையும் உள்ளன.

பொன்விழா பூங்கா
Jubilee Park
பொன்விழா பூங்கா இரவுக்காட்சி
அமைவிடம்சாக்சி, ஜம்சேத்பூர், ஜார்கண்ட், இந்தியா
ஆள்கூறுகள்22°48′36″N 86°11′43″E / 22.810037°N 86.195158°E / 22.810037; 86.195158
கருப்பொருள்பூங்கா
உரிமையாளர்டாடா ஸ்டீல்
இயக்குவோர்டாடா ஸ்டீல்
திறப்புAugust 1958
பரப்பளவு500 ஏக்கர்கள் (2.0 km2)
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு பூங்காவானது 1958ஆம் ஆண்டில், இந்நகரத்தின் பொன்விழாவையொட்டி, நிறுவப்பட்டது. பொன்விழா நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்று. இந்த பூங்காவானது டாட்டா ஸ்டீல் நிறுவனம் இந்த டாடாநகர் (ஜம்சேத்பூர்) நகர வாசிகளுக்கு வழங்கும் பரிசாக உள்ளது.

தொலைநோக்கு பார்வையுடைய ஜம்சேத்ஜீ டாடாவிற்கு மைசூரில் உள்ள பிருந்தாவன தோட்டங்கள் ஏற்படுத்திய உத்வேகம் காரணமாக இது நிர்மாணிக்கப்பட்டது. இந்த பூங்கா ஜாம்செட்ஜி டாடாவின் மதிப்பினைக் காட்டுகிறது. மேலும் இது ஜம்சேத்பூரின் முகலாய தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. டாடா எஃகு விலங்கியல் பூங்கா, நிக்கோ ஜூபிலி கேளிக்கை பூங்கா, ஜெயந்தி சரோவர் (மிருகக்காட்சிசாலை ஏரி), வெளவால் தீவு, குழந்தைகள் பூங்கா மற்றும் ரோஸ் தோட்டம் ஆகியவை அமைந்திருப்பது இப்பூங்காவினையும் பிரபலமாக்கியுள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்