டாடா எஃகு விலங்கியல் பூங்கா
டாடா எஃகு விலங்கியல் பூங்கா (Tata Steel Zoological Park) இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலம் ஜாம்சேத்பூர் நகரத்திற்கு அருகிலுள்ள சாக்சி கிராமத்தில் ஜூபிலி பூங்காவின் ஒரு மூலையில் அமைந்துள்ளது. [1] டாடா எஃகு விலங்கியல் பூங்கா சுற்றுலாப்பூங்கா வகைகளில் சிறப்புப் பெயர் பெற்ற பூங்காவாகும். விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் பயணம் செய்தவாறே விலங்குகளை கண்டு இரசிக்க முடியும். பூங்காவிலுள்ள விலங்குகளைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் இயற்கை கல்வி மையத்தையும் சுற்றுலாவாசிகள் பார்வையிடலாம். [2] ஜூபிலி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வதும் இயற்கைப் பாதையில் நடந்து போவதும் டாடா எஃகு விலங்கியல் பூங்காவிலுள்ள இதர சிறப்பம்சங்களாகும். [3][4]
டாடா எஃகு விலங்கியல் பூங்கா | |
---|---|
22°48′53″N 86°11′45″E / 22.814610°N 86.195925°E | |
திறக்கப்பட்ட தேதி | 3 மார்ச்சு 1994 |
அமைவிடம் | சாக்சி, ஜம்சேத்பூர், சார்க்கண்டு, இந்தியா |
நிலப்பரப்பளவு | 25 ha (62 ஏக்கர்கள்) |
உறுப்புத்துவங்கள் | டாடா எஃகு |
வலைத்தளம் | Tata Steel Zoological Park |
டாடா எஃகு விலங்கியல் பூங்காவில் பல வகையான பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகள் உள்ளன. பொதுப் பார்வைக்கு காட்டுப் பூனைகள், குள்ளநரி, வங்காள கீரிப்பிள்ளைகள், வௌவால்கள் எலிகள் மற்றும் மூன்று கோடிட்ட அணில்கள் முதலிய விலங்குகள் தென்படும். மேலும், 36 வகையான பறவைகள் மற்றும் பல்வேறு ஊர்வன வகை விலங்குகளையும் இங்கு காணலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Three tiger cubs born". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/pti-stories/three-tiger-cubs-born-117082301300_1.html. பார்த்த நாள்: 13 August 2017.
- ↑ "बाघिन डोना ने तीन शावकों को जन्म दिया, जू में अब सात बाघ हो गए". Dainik Bhaskar. https://www.bhaskar.com/news/JHA-JAMS-OMC-tigrin-donna-of-tata-steel-zoological-park-gave-birth-to-three-cubs-on-wednesday-567737.html. பார்த்த நாள்: 24 August 2017.
- ↑ "Royal Bengal tigress dies in Tata zoo". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/jamshedpur/royal-bengal-tigress-dies-in-tata-zoo/articleshow/58484260.cms. பார்த்த நாள்: 3 May 2017.
- ↑ "Chicken feed for Tata zoo inmates". The Telegraph. https://www.telegraphindia.com/1170527/jsp/jharkhand/story_153678.jsp. பார்த்த நாள்: 27 May 2017.