பொன்பரிப்பு தொல்லியற் களம்

(பொம்பரிப்பு தொல்லியற் களம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொன்பரிப்பு தொல்லியல்களம் இலங்கையின் தற்போதைய புத்தளம் மாவட்டத்திலுள்ள பொன்பரிப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது புத்தளம் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வடக்கில், கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பொன்பரிப்பு அகழ்வாய்வு வரலாறு

தொகு

1923 - 1924 ஆம் ஆண்டுகளில் ஏ. எம். ஹோக்கார்ட் (A.M. Hocart) என்பார் புத்தளம் - மன்னார் கரையோரப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது பொன்பரிப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றைக் கண்டுபிடித்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ராஜா டி சில்வா, பல தாழி அடக்கமுறை சார்ந்த பல ஈமத்தாழிகளை அகழ்ந்து எடுத்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஆய்வு நடத்திய விமலா பேர்க்லே (Vimala Begley), பெனட் புரொன்சன் (Bennet Bronson), முஹம்மது மௌரூப் (Mohamed Mauroof) ஆகியோரைக் கொண்ட பென்சில்வேனியப் பல்கலைக் கழகக் குழு ஒன்று இப் பகுதியிலிருந்து மேலும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்தது.