பொய்க்கால் நடை

பொய்க்கால் நடை சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

ஏறி நடக்க உதவும் கொட்டாங்குச்சிகள்
பொய்க்கால் நடை குதிரைக்குளம்பு நடை

தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்படும். அதில் கண் உள்ள இரண்டு தேங்காய்மூடிக் கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்வர். ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு ஓட்டையில் கயிற்றை விட்டு மாட்டுவர். இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கொட்டாங்குச்சியின் கயிற்றைக் கால்-கட்டைவிரலின் இடுக்கில் பிடித்துக்கொண்டு ஏறி நடந்து மகிழ்வர்.

பொய்க்கால் குதிரை, கோக்கழிக்கட்டை விளையாட்டுகளைப் பெரியவர்கள் விளையாடுவது போல, இந்தப் பொய்க்கால் நடை கொட்டாங்குச்சி விளையாட்டைச் சிறுவர் விளையாடுவர்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்க்கால்_நடை&oldid=3082973" இலிருந்து மீள்விக்கப்பட்டது