பொருளாதார முறைமை

(பொருளாதார அமைப்புக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொருளாதார முறைமைகள் (Economic systems) என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, பகிர்வு, மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கப்படும் ஓர் ஒழுங்கு முறை ஆகும்.[1] ஒரு சமூகம் எவ்வளவு உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு அது செல்வம்மிக்கது எனலாம். செல்வம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த அவசியம் ஆகும். சூழ்நிலைகளுக்கேற்ப இருக்கும் இயற்கை வளம், மனித வளம், பண முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றை நியாமான முறையில் பயன்படுத்தி செல்வத்தைப் பொருக்குவதே பொருளாதார முறையின் நோக்கம் ஆகும்.

பொருளாதார முறைமைகள் கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான எதனை உற்பத்தி செய்தல்?,எவ்வாறு உற்பத்தி செய்தல்?, யாருக்காக உற்பத்தி செய்தல்?, எவ்வளவு உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது.[2] எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள், சமூகங்களில் இவற்றிற்க்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார முறைமைகள் வேறானவைகள் ஆகும்.

உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளாதார முறைமைகளாவன:

மேற்கோள்கள்

தொகு
  1. Daniel J. Cantor, Juliet B. Schor, Tunnel Vision: Labor, the World Economy, and Central America, South End Press, 1987, p. 21: "By economic system or economic order, we mean the principles, laws, institutions, and understandings business is conducted."
  2. Gregory and Stuart, Paul and Robert (February 28, 2013). The Global Economy and its Economic Systems. South-Western College Pub. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1285055350. Economic system – A set of institutions for decision making and for the implementation of decisions concerning production, income, and consumption within a given geographic area.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருளாதார_முறைமை&oldid=3431010" இலிருந்து மீள்விக்கப்பட்டது